Home /News /technology /

மீண்டும் 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..! 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவை எனத் தகவல்

மீண்டும் 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..! 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவை எனத் தகவல்

WhatsApp | இந்திய சட்டம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை விதிமுறைகளை யாரெல்லாம் மீறுகிறார்களோ, அவர்களின் கணக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் மார்ச் மாதம் 2022 ஆண்டில், முறைகேடான கணக்குகள் மீது 597 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
    இணையம் உலகின் பெரும்பாலான நபர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், தொழில் நுட்ப ஜாம்பவான்கள் ஒவ்வொரு யூசரின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2021 சட்டப்படி, மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்த கணக்குகள் முடக்கப்படும். மார்ச மாத யூசர் பாதுகாப்பு மாதாந்திர அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்பாக, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அறிக்கையில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில், அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு, முறைகேடான நடவடிக்கைகள் கண்டறியப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்ஆப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பிப்ரவரி மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்திய சட்டம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை விதிமுறைகளை யாரெல்லாம் மீறுகிறார்களோ, அவர்களின் கணக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் மார்ச் மாதம் 2022 ஆண்டில், முறைகேடான கணக்குகள் மீது 597 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 112 கணக்குகள் சப்போர்ட் சம்பந்தப்பட்டது, 407 புகார்கள் வாட்ஸ்ஆப் கணக்கு தடை செய்யப்பட்டதற்கான அப்பீல் மற்றும் மீதமிருக்கும் கணக்குகள் புராடக்ட் ஆதரவு, பாதுகாப்பு ஆகியவை குறித்து புகார் செய்யப்பட்ட கணக்குகள் ஆகும்.

    வாட்ஸ்அப் நிறுவனத்தின் அறிக்கையில் மற்றொரு பகுதியில், மார்ச் 1 முதல் மார்ச் 31 2002 வரை, 18.5 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கை தவறாக பயன்படுத்தியதை அப்யூஸ் டிடக்ஷன் அம்சம் மூலம் கண்டறியப்பட்டு, அந்தக் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்யூஸ் டிடக்ஷன் என்பது முறைகேடாக கணக்கை பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இதில் ஒரு நபரின் வாட்ஸ்அப் கணக்கு மூன்று விதமாக பரிசீலனை செய்யப்படும்.

    Also Read : உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை இந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

    * முதலாவதாக, வாட்ஸ்அப் கணக்கு புதிதாக பதிவு செய்யும் பொழுது
    * இரண்டாவதாக மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது மற்றும்
    * மூன்றாவதாக எதிர்மறையான கருத்துகளுக்கு எப்படி பதில் அளிக்கப்படுகிறது என்று என்பதாகும்

    மேலும், வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாகவும், அதன் மூலம், சாட் செய்யும் போது, நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டசை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    Also Read : பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்களுக்கு கூடுதல் அம்சங்களை தர WhatsApp-ல் விரைவில் வருகிறது சந்தா திட்டம்..

    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் எந்த யூசரும், கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால், வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்படும் என்பதை நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த அடிப்படையில், கடந்த மாதம் வரை, சேவை விதிமுறைகளை மீறியதற்காக 60 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு கூடுதலாக, மார்ச் மாத அறிக்கையின் படி, கூடுதலாக 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வநதுள்ளது. உலகளவில் இதுவரை தடை செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Technology, WhatsApp

    அடுத்த செய்தி