முதலாவதாக இந்தியாவில் ரெனோ 3-ம் மாடலை அறிமுகம் செய்யும் ஓப்போ!
கூடுதலாக கேமிங் திறனை அதிகரிக்க கேம் பூஸ்ட் 2.0 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.

ஓப்போ ரெனோ சீரிஸ் (மாதிரிப்படம்)
- News18
- Last Updated: August 5, 2019, 2:57 PM IST
வெளிநாட்டு சந்தைகளுக்கு அல்லாமல் முதலாவதாக இந்திய சந்தையில் தனது ரெனோ முன்றாம் மாடலை ஓப்போ அறிமுகம் செய்கிறது.
சீன நிறுவனமான ஓப்போ, இதர சந்தைகளுக்கு முன்னதாக இந்தியாவில் ரெனோ ஸ்மார்ட்ஃபோனின் மூன்றாவது மாடலை அறிமுகம் செய்கிறது. கடந்த மே மாதம்தான் ஓப்போ ரெனோ 10x ஜூம் மற்றும் ஓப்போ ரெனோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை ஓப்போ வெளியிட்டது.
இந்தியாவில் தீபாவளியின்போது புதிய ஓப்போ ரெனோ வெளியாகும் என்றும் இதனது விலை 40ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஓப்போ ரெனோ 10x ஜூம் ஃபோன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. இதனது விலை 39,990 ரூபாய் ஆகும். இதேபோல், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 49,990 ரூபாய் ஆகும். ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலேயே ஓப்போ ரெனோ 10x ஜூம் மற்றும் ஓப்போ ரெனோ ஃபோன்கள் செயல்படுகின்றன. ஓப்போ தனது ரெனோ சீரிஸ் ஃபோன்களுக்கு Hi-Res மற்றும் டால்பி அட்மோஸ் அம்சங்களை அளித்துள்ளன. கூடுதலாக கேமிங் திறனை அதிகரிக்க கேம் பூஸ்ட் 2.0 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.
மேலும் பார்க்க: 64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!
சீன நிறுவனமான ஓப்போ, இதர சந்தைகளுக்கு முன்னதாக இந்தியாவில் ரெனோ ஸ்மார்ட்ஃபோனின் மூன்றாவது மாடலை அறிமுகம் செய்கிறது. கடந்த மே மாதம்தான் ஓப்போ ரெனோ 10x ஜூம் மற்றும் ஓப்போ ரெனோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை ஓப்போ வெளியிட்டது.
இந்தியாவில் தீபாவளியின்போது புதிய ஓப்போ ரெனோ வெளியாகும் என்றும் இதனது விலை 40ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஓப்போ ரெனோ 10x ஜூம் ஃபோன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. இதனது விலை 39,990 ரூபாய் ஆகும். இதேபோல், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 49,990 ரூபாய் ஆகும்.
மேலும் பார்க்க: 64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!