ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Snapdragon 8+ Gen 1 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகி இருக்கும் ஒப்போவின் ரெனோ 9 சீரிஸ்.!

Snapdragon 8+ Gen 1 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகி இருக்கும் ஒப்போவின் ரெனோ 9 சீரிஸ்.!

ஒப்போ ரெனோ 9 சீரிஸ்

ஒப்போ ரெனோ 9 சீரிஸ்

Oppo Reno 9 Series | ஒப்போவின் ரெனோ 9 சீரிஸ் மாடல்களில் டாப்ஸ்பெக் மாடலான ரெனோ 9 ப்ரோ+, Snapdragon 8+ Gen 1 ப்ராசஸரை கொண்டு இயங்கும் அதே நேரம், மற்ற 2 மாடல்களில் ரெனோ 9 மொபைல் Qualcomm Snapdragon 778G ப்ராசஸரை கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தனது அடுத்த தலைமுறை ரெனோ சீரிஸை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் ரெனோ 9, ரெனோ 9 ப்ரோ மற்றும் ரெனோ 9 ப்ரோ+ உள்ளிட்ட 3 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. Reno 9 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 13-ல் இயங்குகிறது.

இந்த 3 மொபைல் மாடல்களில் டாப்ஸ்பெக் மாடலான ரெனோ 9 ப்ரோ+, Snapdragon 8+ Gen 1 ப்ராசஸரை கொண்டு இயங்கும் அதே நேரம், மற்ற 2 மாடல்களில் ரெனோ 9 மொபைல் Qualcomm Snapdragon 778G ப்ராசஸரை கொண்டுள்ளது. ரெனோ 9 ப்ரோ மொபைல் MediaTek Dimensity 8100-Max ப்ராசஸரை கொண்டுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சீரிஸ் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை.

ஒப்போ ரெனோ 9 சீரிஸ் மொபைல்களின் விலை விவரங்கள்:

- ரெனோ 9 ஸ்மார்ட் போன் 12GB ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த மாடல் மொபைலின் விலை சீனாவில் RMB 2,499-ஆக (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.28,500) உள்ளது.

- ரெனோ 9 ப்ரோ மொபைலின் 16GB + 256GB வேரியன்ட்டின் விலை RMB 3,499-க்கு (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.39,800) கிடைக்கிறது.

- ரெனோ 9 ப்ரோ+ மொபைலின் 16GB ரேம் வேரியன்ட்டின் விலை RMB 3,999-க்கு (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.45,600) கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 9 சீரிஸ் அம்சங்கள்:

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 9, 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ+ ஆகிய 3 மொபைல் மாடல்களிலும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொடுத்துள்ளது. ஆனால் இந்த மொபைல்கள் முறையே ஃபுல் HD+ ரெசல்யூஷனுடன் AMOLED டிஸ்ப்ளே, ஃபுல் HD+ குவாலிட்டியுடன் கூடிய OLED டிஸ்ப்ளே மற்றும் ஃபுல் HD+ குவாலிட்டியுடன் OLED பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல்களில் அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

ரெனோ 9 மொபைலானது 12GB ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்டையும், ரெனோ 9 ப்ரோவானது 16GB ரேமுடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட்டையும், ரெனோ 9 ப்ரோ+ மொபைலானது 16GB ரேமுடன் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட்டையும் பயன்படுத்துகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 9 மொபைல் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார் என 2 கேமராக்களை கொண்டுள்ளது. ஃபோனின் முன்புறம் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Also Read : வாட்ஸ்அப் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

ரெனோ 9 ப்ரோ மொபைலின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார் என 2 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் செல்ஃபிக்களுக்காக ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் டாப் ஸ்பெக் மாடலான ரெனோ 9 ப்ரோ மொபைலின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது.

First published:

Tags: OPPO, Tamil News, Technology