Home /News /technology /

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Oppo Reno 8 சீரிஸ் - முழு விவரம்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Oppo Reno 8 சீரிஸ் - முழு விவரம்!

oppo

oppo

Oppo Reno 8 series | இந்தியாவில், Oppo Reno 8 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 7 சீரிஸ்-ஐ தொடர்ந்து வெளியாகிறது.

    ஓப்போ ரெனோ 8 சீரிஸ் இந்தியாவில் ஜூலை 18ம் தேதி வெளியிடப்படும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஓப்போ நிறுவனம் கடந்த சில காலமாகவே புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சீனாவில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஓப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் தற்போது இந்தியா வருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் ஃபோன்களில் சீன போன்களை விட மாறுபட்ட சில பிரத்யேக அம்சங்கள் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில், Oppo Reno 8 சீரிஸ் Oppo Reno 8 மற்றும் Oppo Reno 8 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களைப் அறிமுகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் பற்றிய எந்த விவரங்களையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த சாதனங்கள் சீன வெர்ஷனைவிட வேறுபட்ட சிப்செட்களைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில், Oppo Reno 8 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 7 சீரிஸ்-ஐ தொடர்ந்து வெளியாகிறது. புதிய Oppo Reno 8 சீரிஸ் இந்திய நேரப்படி ஜூலை 18 மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.

    சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட, Oppo Find X5 ஸ்மார்ட்போனில் MariSilicon moniker கேமரா சிப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஓப்போ நிறுவனம் அளித்த தகவலின்படி, Oppo Reno 8 சீரிஸ் MariSilicon X NPU உடன் வருகிறது, இது HDR ஃப்யூஷன் மற்றும் AI ஒலி குறைப்பு மூலம் 4K அல்ட்ரா HDR வீடியோக்களை எடுக்க உதவுகிறது.



    இந்த சாதனங்களில் customised சோனி சென்சார்களும் இருக்கும். Oppo Reno 8 Pro ஆனது கொரில்லா கிளாஸ் 5 உடன் இணைந்து அலுமினிய ஃப்ரேம் உடன் வருவதையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 179 கிராம் எடையுடன் 7.67 மிமீ அளவிற்கு மெல்லியதாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இதில் நிறுவப்பட்டிருக்கும்.

    Also Read : மோட்டோ எட்ஜ் 30 முதல் ஒன்பிளஸ் நோர்ட் 2 வரை; ரூ.30,000 பட்ஜெட்டில் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்!

    இதில் LPDDR5 ரேமும், UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்படலாம். மிக முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) பிராசெஸ்சார் கொண்டு இயக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போது வெளியாக இருக்கும் புதிய ஓப்போ பிரீமியம் ஸ்மார்ட்போனில், வால்யூம் பட்டன்கள் இடது பக்கவாட்டில் நிறுவப்பட்டுள்ளது. ஓப்போ ரெனோ 8 ப்ரோ Glazed Green, Glazed Black என இரண்டு நிறங்களில்- கிடைக்கும் என்று Oppo தெரிவித்துள்ளது. இதே போன்று ரெனோ 8 Shimmering Gold, Shimmering Black ஆகிய இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கும். ஒப்போ ரெனோ 8 மாட்சல் 6.4 இன்ச் உடன் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

    Also Read : ரூ.75,000-க்குள் உங்களுக்கு கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள்.!

    பின்பக்கம் 50MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4,500mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை ஊக்குவிக்க 80W வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை, விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: OPPO, Smartphone, Technology

    அடுத்த செய்தி