நான்கு கேமிராக்கள் உடன் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் ஓப்போ ரெனோ 2!

6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 4,065mAh பேட்டரி திறன் கொண்டதாக ரெனோ 2 வெளிவரும்.

Web Desk | news18
Updated: August 19, 2019, 12:32 PM IST
நான்கு கேமிராக்கள் உடன் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் ஓப்போ ரெனோ 2!
ஓப்போ ரெனோ 2
Web Desk | news18
Updated: August 19, 2019, 12:32 PM IST
இந்தியாவில் ரெனோ 2 ஸ்மார்ட்ஃபோனை வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியிட உள்ளதாக ஓப்போ அறிவித்துள்ளது.

சீன நிறுவனமான ஓப்போ தனது துணை ப்ராண்ட் ரெனோவின் கீழ் இரண்டாவது ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் வெளியிட உள்ளது. க்வாட் கேம் என்றழைக்கப்படும் நான்கு கேமிராக்கள் திறன் உடன் ரெனோ 2 வெளிவருகிறது.

இந்தியாவில் அழுத்தமாகக் கால்பதிக்க ஓப்போ முயற்சி எடுத்து வருகிறது. இந்த வகையில் 20X ஜூம் திறன் ரெனோ 2-வின் சிறப்பு அம்சமாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதன் முதலாக அறிமுகமான ஓப்போ ரெனோவில் கொடுக்கப்பட்ட ‘ஷார்க்-ஃபின்’ செல்ஃபி கேமிரா அம்சமே ரெனோ 2-விலும் இடம் பெற்றுள்ளது.


ரெனோ ப்ராண்ட் ஸ்மார்ட்ஃபோன்களின் முக்கிய கவனமே கேமிரா திறன் மீதுதான் உள்ளது. அதிதுள்ளியமான கேமிரா திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை சந்தைப்படுத்துவதில் முன்னோடியாகவும் ரெனோ முயற்சித்து வருகிறது.

புதிய வரவாக ரெனோ 2 மற்றும் ரெனோ 20X ஜூம் ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்கள் வெளிவர உள்ளன. 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 4,065mAh பேட்டரி திறன் கொண்டதாக ரெனோ 2 வெளிவரும்.

மேலும் பார்க்க: வீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்... இலவச சேவைக்கு வரவேற்பு கிடைக்குமா...?

Loading...

ஏசி பயன்படுத்தும் போது வரும் ஆபத்துகளில் இருந்து தப்புவது எப்படி?
First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...