Home /News /technology /

Reno 8 series-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்த ஓப்போ நிறுவனம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இங்கே.!

Reno 8 series-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்த ஓப்போ நிறுவனம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இங்கே.!

oppo

oppo

Oppo Reno 8 Series | ரெனோ 8 சீரிஸுடன் இந்தியாவில் அதன் முதல் டேப்லெட்டான Oppo Pad Air மற்றும் TWS இயர்பட்ஸ் Oppo Enco X2 ஆகியவற்றையும் ஒப்போ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓப்போ (Oppo) நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் (Reno 8 series) ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெனோ 8 சீரிஸுடன் இந்தியாவில் அதன் முதல் டேப்லெட்டான Oppo Pad Air மற்றும் TWS இயர்பட்ஸ் Oppo Enco X2 ஆகியவற்றையும் ஒப்போ அறிமுகப்படுத்தியுள்ளது .

ரெனோ 8 சீரிஸ் முதன்முதலில் சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ரெனோ 8 சீரிஸில் Reno 8 மற்றும் Reno 8 Pro ஆகிய 2 மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஓப்போ ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ விலைகள்...

Oppo Reno 8 டிவைஸானது சிங்கிள் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் ரூ.29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Black மற்றும் Gold கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ (12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்) மொபைலின் விலை ரூ.45,999 ஆகும். இது Glazed Black மற்றும் Glazed Green உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். Reno 8 Pro மற்றும் Reno 8 ஆகியவை முறையே ஜூலை 19 மற்றும் ஜூலை 25 முதல் Flipkart, Oppo Store மற்றும் ரீடெயில் அவுட்லெட்களில் வாடிக்கையாளர்கள் வாங்க கிடைக்கும்.



Reno 8 மற்றும் Reno 8 Pro மொபைல்களின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

Reno 8 மொபைலானது 6.43-இன்ச் FHD AMOLED பேனலை 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 800 nits பீக் பிரைட்னஸுடன் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 1300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரம் Reno 8 Pro 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

Also Read : இந்தியாவில் Xiaomi புதிய மாடல் தயாரிப்புகள் வெளியானது.!

Reno 8 Pro-ல் உள்ள AMOLED பேனல் HDR10+ சான்றிதழை கொண்டுள்ளது. Mediatek-ன் Dimensity 8100-Max சிப்செட் இந்த ஸ்மார்ட்போனை இயக்குகிறது. இது 12GB+256GB சார்ஜ் வேரியன்ட்டில் வருகிறது. 2 ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான ColorOS 12.1ல் இயங்குகின்றன.

Also Read : ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்

கேமராவை பொறுத்தவரை, ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ இரண்டும் பின்புறம் மற்றும் முன்பக்கத்தில் ஒரே கேமரா செட்டப்பை பகிர்ந்து கொள்கின்றன. ரெனோ 8 சீரிஸ் 50MP சோனி ஐஎம்எக்ஸ்766 பிரைமரி சென்சார், 8MP ஐஎம்எக்ஸ்355 அல்ட்ராவைட் யூனிட் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முன் பக்கத்தில் 2 ஸ்மார்ட்போன்களிலும் செல்ஃபிக்களுக்காக 32MP Sony IMX709 சென்சார் உள்ளது. Reno 8 Pro மொபைலானது MariSilicon X NPU-உடன் வருகிறது. 2 ஸ்மார்ட்போன்களும் 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 4500mAh பேட்டரியை கொண்டுள்ளன.



ஓப்போ பேட் ஏர்:

இந்த டேப்லெட் 10.36-இன்ச் 2K IPS LCD டிஸ்ப்ளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 SoC இல் இயங்குகிறது, இது 4GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 7100mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர டால்பி அட்மோஸ் சப்போர்ட்டுடன் 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. பின்புறத்தில் 8 மெகாபிக்சல், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இதன் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.16,999 ஆகும்.



என்கோ எக்ஸ்2 இயர்பட்ஸ்:

Super Dynamic Balance Enhanced Engine (SuperDBEE) எனப்படும் அடுத்த தலைமுறை ஒலியியல் அமைப்பை இயக்க Dynaudioon உடன் பணிபுரிந்துள்ளதாக Oppo கூறுகிறது, மேலும் பட்ஸ் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழை கொண்டுள்ளன. என்கோ X2 LHDC கோடெக்கை ஆதரிக்கிறது மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP54 ரேட்டிங் பெற்றுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தல் 5 மணிநேரத்திற்கு மேலான பிளேபேக்டைமை கொண்டுள்ளது. ரூ.10,999 விலை கொண்ட Enco X2 TWS இயர்பட்ஸ், Flipkart, Oppo-வின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெயிலர் ஸ்டோர்களில் ஜூலை 25 முதல் கிடைக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: OPPO, Technology

அடுத்த செய்தி