பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் அறிமுகமாகிறது ஓப்போ K3..!

256 ஜிபி ஸ்டோரேஜ்+8ஜிபி ரேம் ஃபோன் 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 2:12 PM IST
பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் அறிமுகமாகிறது ஓப்போ K3..!
ஓப்போ K3
Web Desk | news18
Updated: July 20, 2019, 2:12 PM IST
ஓப்போ புதிய K3 ஸ்மார்ட்ஃபோனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மாலை 6 மணி அளவில் டெல்லியில் அறிமுகமாகும் K3, இன்று முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

ஓப்போ K3 ஸ்மார்ட்ஃபோன் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகமானது. AMOLED டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமிரா, விரல் நுனி ஸ்கேனர் என அசத்தல் அம்சங்களுடன் ஓப்போ K3 அறிமுகமாக உள்ளது. 6.5 இன்ச் முழு ஹெச்டி திரை உடனான K3-ன் திறன் மேம்பாடு ஸ்னாப்ட்ராகன் 710 SoC ஆகும். ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி X ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் இதே திறன் மேம்பாடு கொண்டவைதாம்.

16 மெகா பிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமிரா உள்ளது. ரியர் கேமிரா 16+2 மெகாபிக்சல் திறன் கொண்டதாக உள்ளது. பேட்டரி திறன் 3,765mAh ஆக உள்ளது. இது அதிவேக சார்ஜ் திறன் கொண்டதாகும். ப்ரொஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடனான விரல்நுனி சென்சார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஃபோனின் திறன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.


6ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 16ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது. 6ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் 19ஆயிரம் ரூபாய்க்கும் 256 ஜிபி ஸ்டோரேஜ்+8ஜிபி ரேம் ஃபோன் 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...