ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி பாஸ்வோர்ட் இல்லாமல் உள்நுழையலாம்.. ஓப்போவின் புதிய அம்சம்!

இனி பாஸ்வோர்ட் இல்லாமல் உள்நுழையலாம்.. ஓப்போவின் புதிய அம்சம்!

oppo

oppo

FIDO கூட்டணி 2012 முதல் உள்ளது, ஆனால் கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுகளில் கவனம் செலுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒப்போ நிறுவனம் தற்போது கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு வசதி வழங்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு என்பது வரும் ஆண்டுகளில் பல தொழிலநுட்ப உற்பத்தியாளர்களுக்கு பரபரப்பான விஷயமாக இருக்கும்.

டிஜிட்டல் உள்நுழைவுகள் நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. அத்தனை டிஜிட்டல் கணக்குகளை வைத்துள்ளோம். அதனால் அத்தனை கணக்குகளின் கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பது சவாலாக உள்ளது. பாஸ்வோர்ட்களை மறந்துவிட்டால் அதை மீட்டமைப்பதே ஒரு பெரிய வேலையாக மாறிவிடும்.

பெருநிறுவனங்கள் இத்தகைய நடைமுறைகளை நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன. அமைப்பை மாற்றுவதற்கான மொத்த விருப்பமும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகிறது.

செல்போன்களில் GPSக்கு பதிலாக இந்திய செயலியான NavICஐ கொண்டுவர முயல்கிறதா இந்தியா?

ஆப்பிள் மற்றும் கூகுள் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பணிபுரியத் தொடங்கியுள்ளன. அந்த FIDO கூட்டணியில் Oppo வும் உறுப்பினராக சேருகிறது. FIDO (ஃபாஸ்ட் ஐடென்டிட்டி ஆன்லைன்) என்கிற அங்கீகாரத் தரநிலையானது, பயனர்கள் இணையதளங்கள் மற்றும் செயலிகளை அணுகுவதற்கான வேகமான மற்றும் பாதுகாப்பான அங்கீகார பொறிமுறையை வரையறுக்கிறது.

FIDO கூட்டணி 2012 முதல் உள்ளது, ஆனால் கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுகளில் கவனம் செலுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது. தற்போது FIDO கூட்டணியின் உறுப்பினராக, OPPO தனது  வாடிக்கையாளர்களுக்கு விரைவான, பயனர் நட்பு அம்சம் மற்றும் பாதுகாப்பான அடையாளத்தை வழங்கும்.  மேலும், முதன்மையாக பாஸ்கி கிரிப்டோகிராஃபி மற்றும் FIDO ஆல் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி, கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுகளுக்கான சமீபத்திய FIDO தேவைகளை மேம்படுத்தும்.

கடவுச்சொல் மேலாளண்மை இத்தகைய நடைமுறைகளுக்கு வலுவான மாற்றாக இருப்பதாக பலர் பரிந்துரைப்பார்கள். ஆனால் விவாதிக்கப்படும் இன்றைய புதிய தரநிலைகள் முழு பொறிமுறையையும் வேறு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. இது மிகவும் வசதியானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்

ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை இந்த அம்சத்தின் வளர்ச்சியில் பணிபுரிந்து வருவதாக கூறுகின்றன. சமீபத்தில் ஒப்போ இந்த வரிசையில் இணைந்துள்ளது. பல பிராண்டுகள் கடவுச்சொற்கள் இல்லாமல் உள்நுழையும் வசதியை ஏற்படுத்த முயல்கிறது. கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் ஐடி போன்ற பல பயோமெட்ரிக் அம்சங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

FIDO உள்நுழைவு முதன்மையாக வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை அனைத்து டிஜிட்டல் கணக்குகளுக்கும்  தனித்தனி பாஸ்வோர்ட் இல்லாமல் ஒரே உள்நுழைவு ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்கும். எனவே, எதிர்காலத்தில், உங்கள் ஃபோனின் 4/6 இலக்க கடவுக்குறியீடு, விரல் ஐடி அல்லது முக ஐடியைப் பயன்படுத்தி உங்கள் ஜிமெயில் அல்லது அவுட்லுக் கணக்கில் உள்நுழைய முடியும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Apple, Google, OPPO