ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டிசம்பர் 15-ல் அறிமுகமாகும் Oppo-வின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட் ஃபோன்!

டிசம்பர் 15-ல் அறிமுகமாகும் Oppo-வின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட் ஃபோன்!

Oppo Find N

Oppo Find N

ஒப்போவின் 4 வருட ரிசர்ச் & டெவலப்மென்ட் விளைவாக இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளிவருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியாக (foldable phone- ஃபோல்டபிள் ஃபோன்) Oppo Find N அறிவிக்கப்பட்டுள்ளது. Oppo நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அலுவலரான Pete Lau, நிறுவனத்தின் முதல் கமர்ஷியல் ஃபோல்டபிள் ஸ்மார்ட் ஃபோனை (first commercial folding smartphone) ஊடகங்களுக்கு எழுதிய கடிதம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். Samsung Galaxy Z Fold சீரிஸை போலவே, புதிய Oppo Find N ஃபோனானது inward folding டிசைன் அதாவது உள்நோக்கிய மடிப்பு டிசைனை கொண்டுள்ளது.

சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள Oppo Find N ஃபோனின் டீஸர்களின் அடிப்படையில், இந்த ஃபோன் மெட்டல் ஃபினிஷ் மற்றும் ப்ரைமரி ஆப்ஷனாக மடிக்கக்கூடியது உட்பட 2 வெவ்வேறு OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும் Oppo ஒரு தனித்துவமான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்க அதன் தனியுரிம மென்பொருள் அனுபவத்தை (proprietary software experience) இதனுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போவின் 4 வருட ரிசர்ச் & டெவலப்மென்ட் விளைவாக இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளிவருகிறது. Oppo-வின் தலைமை தயாரிப்பு அதிகாரியும் OnePlus நிறுவனருமான Pete Lau, புதிய ஃபோல்டிங் ஸ்மார்ட் ஃபோனான Oppo Find N-ன் வளர்ச்சியை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ஃபோன் மாடல் எளிமையான டிசைன் மற்றும் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய ஃபோன் மூலம் முந்தைய ஃபோல்டபிள் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள முக்கிய பிரச்சனைகளான ஃபோல்டபுல் டிவைஸின் டிஸ்ப்ளே மற்றும் ஒட்டுமொத்த ஆயுட்காலம் போன்றவற்றை நாங்கள் தீர்த்துள்ளோம் என லாவ் (Pete Lau) கூறி இருக்கிறார்.

Also read:  Gmail-லில் வரும் போலி மின்னஞ்சல்களை அடையாளம் காண்பது எப்படி?

Oppo நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் Oppo Find N குறித்த பார்வையை வழங்க வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ 15-வினாடிகள் ஓடுகிறது. அதன் கவர் மற்றும் ஃபோல்டபிள் டிஸ்ப்ளே என இரண்டிலும் மெல்லிய பெசல்கள் இருப்பதை காட்டுகிறது. அதே போன்று ஃபோனில் குறைந்தபட்சம் அதன் ஃபோல்டபிள் டிஸ்பிளேக்காக ஒரு ஹோல்-பஞ்ச் டிசைனை கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

அதன் மேல் காட்சிக்கு கீழ் கேமரா தொழில்நுட்பம் இருக்கலாம். மேலும் இதன் மேல் ஒரு அண்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் இருக்கலாம். மேலும் குறிப்பிட்ட டீஸர் வீடியோ, இந்த போன் USB Type-C போர்ட் மற்றும் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் சென்சாருடன் வரும் என்பதை காட்டுகிறது. இந்த புதிய டிவைஸ் வரும் டிசம்பர் 15 அன்று Oppo Inno Day-வின் போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Oppo Inno Day-வில் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது.

First published:

Tags: OPPO