மார்வெல் ரசிகர்களுக்காக OPPO F11 Pro Marvel's Avengers ஸ்மார்ட்ஃபோன்!

அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் ஒரு மணி நேரத்திலேயே மொத்த விற்பனையும் நிறைவடைந்தது.

Web Desk | news18
Updated: May 6, 2019, 2:58 PM IST
மார்வெல் ரசிகர்களுக்காக OPPO F11 Pro Marvel's Avengers ஸ்மார்ட்ஃபோன்!
ஓப்போ மார்வெல் ஸ்மார்ட்ஃபோன்
Web Desk | news18
Updated: May 6, 2019, 2:58 PM IST
மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தற்போது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மார்வெல் திரைப்படங்கள் மீதான காதலினால் ஓப்போ மற்றும் மார்வெல் ஸ்டூடியோஸ் இணைந்து புதிதாக OPPO F11 Pro என்னும் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்ஃபோன்களை (OPPO F11 Pro Marvel's Avengers SmartPhone) அறிமுகப்படுத்துகிறது.


சூப்பர் ஹீரோ ஸ்மார்ட்ஃபோன் கடந்த மே 1-ம் தேதி அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் ஒரு மணி நேரத்திலேயே மொத்த விற்பனையும் நிறைவடைந்தது. இரண்டு பெரிய பிராண்டுகளின் அறிமுகம் ரசிகர்களைக் கவர்ந்ததாலே இந்த விற்பனைச் சாதனை நடந்துள்ளது. 27,990 ரூபாய் மட்டுமே என்பதால் விலை நிர்ணயமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதாகவே அமைந்துவிட்டது.
அசத்தல் வடிவமைப்பு:Loading...

தனித்துவமான நீல நிறத்தில் கேப்டன் அமெரிக்காவின் உடையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் லோகோ போன்று ஃபோனின் பின்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமிராவின் மேலே இருக்கும் சிறிய அவெஞ்சர்ஸ் லோகோவும் மிகவும் கவருவதாகவே உள்ளது. கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போலவே ஃபோனுக்கான கேஸ் உள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் உங்கள் கைகளில் மிகவும் அசத்தலான ஸ்டைலிலேயே இருக்கும் இப்புதிய அவெஞ்சர்ஸ் ஸ்மார்ட்ஃபோன்.ஸ்மார்ட்ஃபோனை ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு மிகவும் அசத்தல் நீல நிறத்தில் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட் போலவே டெலிவரி பேக்கேஜ் கொடுக்கப்படும். பேக்கேஜ் உடன் அவெஞ்சர்ஸின் பேட்ஜ் வாடிக்கையாளர்களுக்கு பில் உடன் வழங்கப்பட உள்ளது. கண்களைக் கவரும் வடிவமைப்பும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களும் மார்வெல் ரசிகர்களை நிச்சயமாக இந்த ஸ்மார்ட்ஃபோன் கவரும்.


நீண்ட நேரத்துக்கான 4000 mAh பேட்டரி:


நீங்கள் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவ் என்றால் உங்களுக்கு ஏற்ற 4000 mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் போல ஓப்போ ஸ்மார்ட்ஃபோனுக்கு அதிவிரைவாக சார்ஜ் ஏற்ற V00C 3.0 அதிவிரைவுத்திறன் கொண்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ரசிகர்கள் ஒருநாள் முழுவதும் இடைவேளையே இல்லாமல் நீண்ட நேரம் சார்ஜ் கொண்டதாக இந்த ஸ்மார்ட்ஃபோன் இருக்கும்.அசத்தலான செல்ஃபி-களுக்கு motorized camera:


உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிவதற்கான முதல் படியாக நீங்கள் கேமிரா-வைத்தான் சோதிப்பீர்கள். மிகவும் நுட்பமாக புகைப்படங்கள் எடுக்கும் வகையில் motorized camera பொருத்தப்பட்டுள்ளது. 16MP சென்சார் உடன் உங்களைக் கவரும். குறைவான வெளிச்சத்திலும் அசத்தலான புகைப்படங்கள் எடுக்க கூடுதல் திறன் கொண்ட ஸ்கிரீன் ஃப்ளாஷ் உங்கள் புகைப்படங்களில் மேஜிக் செய்யும். இரவு நேரத்திலும் தெளிவான செல்ஃபிகளுக்கு அல்ட்ரா நைட் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. 48MP லேசர் கூர்மை கொண்ட கேமிரா மார்வெல் ஸ்மார்ட்ஃபோனி டாப் ஸ்பெஷல் அம்சமாகும்.கேமிங்:


Mediatek Helio P70 உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் உச்சபட்ச சிறப்பு அம்சமாக இருக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இந்த ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. தெர்மோ- மேனேஜ்மெண்ட் அம்சம் உங்களது மார்வெல் ஸ்மார்ட்ஃபோனை எப்போதும் கூல் ஆகவே வைத்திருக்கும். கேமிங்-க்கு ஏற்ற செயல்திறன் கொண்டுள்ளது. இடைவிடாத கேமிங் அனுபவத்திற்காக ‘ப்ளாக் நோட்டிஃபிகேஷன்’ அம்சம் உள்ளது.சாப்ட்ஃவேர் உதவி:


Colour OS6 சாப்ட்ஃவேர் OPPO F11 Pro Marvel's Avengers Limited Edition ஸ்மார்ட்ஃபோனில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை சாப்ட்ஃபேர் சிறப்பு அம்சமாகும். தெரியாமல் ஸ்கிரீன் க்ளிக் ஆவதைத் தவிர்க்க சிறப்பு நோட்டிஃபிகேஷன் ஷேட் அம்சம் உள்ளது.ரைடிங் மோட், ஹைப்பர் பூஸ்ட் செயல்பாடுகளுக்கான சிறப்பம்சம் என நிண்ட கால உழைப்புக்கு வெற்றி அளிக்கும் விதமாக இந்த ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் கையில் நிச்சயம் இருக்க வேண்டிய ஸ்மார்ட்ஃபோன் OPPO F11 Pro Marvel's Avengers Limited Edition.
First published: May 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...