இந்திய சந்தையில் கால் பதிக்கிறது ஓப்போ F11 Pro!

ஓப்போ F11 Pro

பாப்-அப் செல்ஃபி கேமிரா, 48 மெகாபிக்ஸல் ரியர் கேமிரா, 3டி கிராடியண்ட் கேஸிங் என தொழில்நுட்ப அம்சங்களில் அசத்துகிறது புதிய F11 Pro.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓப்போ F11 Pro ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் வருகிற மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

சீன நிறுவனமான ஓப்போ தனது புதிய F11 Pro ஸ்மார்ட்ஃபோன் குறித்த சிறு அறிமுகத்தை கடந்த ஒரு வாரமாகவே அதிகப்படியாகவே விளம்பரம் செய்து வருகிறது.

பாப்-அப் செல்ஃபி கேமிரா, 48 மெகாபிக்ஸல் ரியர் கேமிரா, 3டி கிராடியண்ட் கேஸிங் என தொழில்நுட்ப அம்சங்களில் அசத்துகிறது புதிய F11 Pro.

குறைவான வெளிச்சத்திலும் ஃபோட்டோ எடுக்க ஏதுவாக சூப்பர் நைட் மோட் அம்சமும் F11 Pro-வில் இடம் பெற்றுள்ளது. மார்ச் 5-ம் தேதி மும்பையில் நடக்க இருக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓப்போ F11 Pro அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஓப்போ F11 Pro-வில் கூடுதலாக விரைவாக சார்ஜிங் செய்வதற்கான VOOC 3.0, நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, 3டி கிராடியண்ட் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.

முழுமையான விவரங்கள் மார்ச் 5-ம் தேதிக்குப் பின்னரே தெரியவரும். விரல் நுனி சென்சார், டிஸ்ப்ளே என அனைத்தும் அப்டேடட் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருப்பது எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும் பார்க்க: தேர்தலில் எனது கூட்டணி மக்கள் உடன் தான்: கமல்ஹாசன்
Published by:Rahini M
First published: