சமீப நாட்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை சாட் ஜிபிடி(ChatGPT). செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலாக பார்க்கப்படும் இந்த சாட்ஜிபிடி இணைய பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த openAI (ஓபன் ஏஐ) நிறுவனம் சாட்ஜிபிடி-யை உருவாக்கியுள்ளது. இது நாம் கேட்கும் கேள்விகளுக்கும், தரும் கட்டளைகளுக்கும் பதில் தரும் விதத்தில் அமைந்துள்ளது.
உதாரணமாக எனக்கு விடுப்பு கடிதம் எழுதி கொடு என்று கேட்டால், உடனே செய்கிறது, கவிதை வேண்டும் என்று கேட்டால் அதனையும் செய்கிறது. ஜோக்குகளையும் சொல்லி அசத்துகிறது. வரலாறு, தத்துவம், கலாசாரம் என எதை பற்றி வேண்டுமானாலும் ஒரு நண்பருடன் உரையாடுவதை போல உங்களால் இதனுடன் உரையாட முடியும். இது ஒருபுறம் இருந்தாலும், சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின் காரணமாக கூகுள் போன்ற தேடுபொறிகள் இணைய தேடலுக்கு கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நம் சந்தேகங்களை தீர்ப்பதற்கென்றே உருவெடுத்துள்ள கூகுள் தேடுபொறியை விட இது வல்லமை மிக்கதாகவும் அதற்கு கடும் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக கூகுள் போன்ற இணைய நிறுவனங்கள் அவற்றில் வெளியாகும் விளம்பரத்தை வைத்தே தங்கள் வருமானத்தை ஈட்டுகின்றன. நாம் இலவசமாகவே நமக்கு வேண்டியதை அதில் தேடி தெரிந்து கொள்கிறோம். ஆனால், சாட்ஜிபிடி போன்ற இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நம் இணைய தேடலுக்கு கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 9 பில்லியன் அதாவது 900 கோடி கேள்விகள் கூகுளில் இலவசமாக தேடப்படுகின்றன. இதில் 1 சதவிகிதத்திற்கு கட்டணம் வசூலித்தாலே கூகுளுக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். ஆகையால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைமுகமாக நம்மிடம் பணம் வசூலிப்பதற்கான சூழல் உருவாக்கப்படுவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக google drive, one drive, icloud போன்றவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் இலவசமாக புகைப்படங்கள் போன்ற தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இலவச சேமிப்புக்கான அளவு 5 GB முதல் 15GB வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
உங்க whatsapp நம்பரில் ChatGPT-யை இணைத்து செயல்படுத்துவது எப்படி?
இந்த நிலையில், சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் bart எனும் செயற்கை நுண்ணறிவு தேடுபொறி தொழில்நுட்பத்தை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இணைய பயனர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். நாம் கேட்கும் கேள்விகள், தேடும் விஷயங்களை பொருத்து அந்த தொகை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் இந்த தொழில் நுட்பம் வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், இணையத்தை பயன்படுத்துபவர்கள் பணத்தை செலவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறப்படுவது கவலை ரேகைகளை படரவிட்டுள்ளது.
ஸ்ரீராம், சிறப்புச் செய்தியாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ChatGPT, Google Bard AI, Search engine