ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்படுவோர் இழந்த பணத்தை முழுமையாக பெறும் வழி என்ன?

ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்படுவோர் இழந்த பணத்தை முழுமையாக பெறும் வழி என்ன?

Online fraud

Online fraud

சைபர் மோசடி சம்பவங்களில் பாதிக்கப்படும் ஒருவர் இழந்த தனது முழு பணத்தையும் திரும்பப் பெற முடியும்  என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

டெக்னாலஜி வளர வளர அதற்கேற்ப பல புதுமையான முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. நம்மை சுற்றி இருக்கும் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நேரத்தில், பணப்பரிமாற்றங்களை நொடியில் செய்ய ஏதுவாக நெட்பேங்கிங் மற்றும் பேமென்ட்ஸ் ஆப்ஸ்கள் என நிறைய வழிகள் வந்து விட்டன. எனினும் சைபர் கிரிமினல்கள் எனப்படும் ஹேக்கர்களினால் பேங்க் அக்கவுண்ட்டில் பாதுகாப்பாக இருக்கும் பணம் ஆன்லைன் மூலம் திருடப்படும் அபாயங்களும், நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் போன்ற இணைய குற்றங்களின் நிகழ்வுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 2.7 கோடிக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு அதன் மூலம் பண மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இப்படி சட்டவிரோதமாக நடைபெறும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் (Unauthorized transactions) ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் மோசடி அல்லது இணைய மோசடி என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் பாஸ்வேர்ட்ஸ் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் தங்கள் கைகளுக்கு கிடைக்கும் போது, ஹேக்கர்கள் சம்பந்தப்பட்ட நபரின் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து மிக எளிதாக பணத்தை திருடி விடுகிறார்கள். ஹேக்கர்களால் பணத்தை இழந்த பிறகும் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தப்பட்டு விட்டு அமைதியாக இந்த விஷயத்தை விட்டு விடுகிறார்கள். ஆனால் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் ஒருவர் இழந்த தனது முழு பணத்தையும் திரும்பப் பெற முடியும்  என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

Also read: ‘எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது’ – சொமேட்டோ விவகாரம் குறித்து புகார்தாரர் விகாஷ் பேட்டி

ஆம், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளாலும் பாதிக்கப்படும் ஒருவர் தங்கள் இழந்துள்ள முழு பணத்தையும் திரும்பப் பெறலாம். இதற்கு முக்கியமாக ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர் செய்ய வேண்டியது மோசடி பரிவர்த்தனைகள் பற்றி தெரிந்த நேரத்திலேயே சற்றும் தாமதிக்காமல் அது குறித்த தகவல்களை உடனடியாக வெளிப்படுத்துவதன் மூலம் பணத்தை திரும்ப பெற முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், எப்படி அவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படுகிறது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகளால் (unauthorized electronic transactions) இழப்பை சந்தித்திக்கும் ஒருவர், உடனடியாக அவரது வங்கிக்கு தகவல் தெரிவித்தால் இந்த இழப்பில் அவரது பொறுப்பு குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கலாம்.

Also read:  #RejectZomato ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த தமிழர்கள் – மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம்!

திருடப்பட்ட பணம் எப்படி திரும்ப கொடுக்கப்படும்?

நாட்டிலிருக்கும் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக நிதி மோசடி காப்பீட்டை (financial fraud insurance) கொண்டுள்ளன. பாதிக்கப்படும் ஒருவர் பணத்தை இழந்தது குறித்து உடனடியாக தங்கள் வங்கிக்கு தகவல் தெரிவித்த பிறகு, குறிப்பிட்ட வங்கியானது உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு இந்த மோசடி குறித்த தகவலை அறிவிக்கும்.

வங்கியின் இந்த செயல்பாடு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் ஆபத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் பின் ஆன்லைன் மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக 10 வேலை நாட்களுக்குள் முழுப்பணத்தையும் திரும்ப தந்து இழப்பை ஈடு செய்கின்றன.

Also read: சரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..

அதே போல மற்றொரு முக்கியமான விஷயம் சட்டவிரோத பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ஒருவர் தன் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை தாமதமாக தகவல் தெரிவித்தால் ரூ.25,000 வரை அவர்கள் இழப்புக்கு பொறுப்பேற்க வைக்கப்படலாம்.

First published:

Tags: Cyber crime, Cyber fraud, Online crime