முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஐரோப்பாவில் ‘OnePlus Pad’ - புதிய டேப்லெட் வெளியிடுகிறதா ஒன்ப்ளஸ்?

ஐரோப்பாவில் ‘OnePlus Pad’ - புதிய டேப்லெட் வெளியிடுகிறதா ஒன்ப்ளஸ்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஒன்பிளஸ் தனது புதிய டேப்லெட்டை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று லிஸ்டிங் தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்களாக இருந்து வந்த ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது, ‘OnePlus Pad’ என்ற டேப்லெட்டை ஐரோப்பாவில் பதிவு செய்துள்ளது. இதன் பெயரைத் தவிர்த்து EUIPO லிஸ்டிங் வேறு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இந்த டேப்லெட், ‘OnePlus Pad’ என்று அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளரான OnePlus நிறுவனம், ஸ்மார்ட்ஃபோன்கள் மட்டுமின்றி, வயர்லெஸ் இயர்போன்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளது. இப்போது, இந்த ​​நிறுவனம் டேப்லெட்கள் உருவாக்கும் முயற்சியில் இருப்பது போலத் தெரிகிறது. இதைப் பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் (EUIPO) ஒரு லிஸ்டிங்கில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த உள்ளதைக் குறிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்பிளஸ் தனது புதிய டேப்லெட்டை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று லிஸ்டிங் தெரிவிக்கிறது. My SmartPrice ஆல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட EUIPO லிஸ்டிங், "OnePLus Pad" என்ற பெயரில் ஒரு தயாரிப்பைக் காட்டுகிறது. ஆனால், இதன் பெயரைத் தவிர, வேறு எந்தத் தகவலும் இல்லை.

மற்ற முக்கியமான விவரங்களான, டேப்லெட் எப்படி இருக்கும் என்ற காட்சி விவரக்குறிப்புகள், அளவு, டிசைன் மற்றும் செயல்திறன் போன்ற பிற விவரங்கள் எதுவுமே இப்போது வெளியிடப்படவில்லை. OnePlus Pad சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், EUIPO விடம் ஜூலை 1, 2021 அன்று பதிவு செய்யப்பட்டது. “விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது” என்பது தற்போதைய நிலவரம். OnePlus நிறுவனம், சமீபத்தில் அதன் துணை நிறுவனமான, Oppo உடன் இணைந்த அதே நேரத்தில், டேப்லெட் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

Also read: உஷார்! ஃபேஸ்புக் பாஸ்வேர்ட்களை திருடும் ஆப்ஸ்கள்... ஆண்டிராய்டு அதிரடி

அது மட்டுமின்றி, மற்ற BBK எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளான Realme மற்றும் Vivo ஆகிய நிறுவனங்களும் தங்களது டேப்லெட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. விரைவில் ஒரு புதிய டேப்லெட்டை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Realme நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், Vivo நிறுவனமும் EUIPO இணையதளத்தில் Vivo டேப்லெட்டிற்கான வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது.

OnePlus Pad பற்றி எந்த தகவலும் வெளிவராத இந்த சூழலில், மிகப்பெரிய ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, எனவே விரைவில் கூடுதல் விவரங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 9T ஐ இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனில், OnePlus 9 Pro வின் Hasselblad quad கேமராக்கள் இருக்கும் என்று டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது (@imailisa0825).

First published:

Tags: One plus, Smartphone