• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன்!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன்!

ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன்

ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன்

இந்த ஹாரிபாட்டர் எடிஷன் வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் 2.5D கர்வ்டு கிளாஸ் ப்ரொடக்ஷனுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸிற்கான IP68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளது.

  • Share this:
ஒன்பிளஸ் நிறுவனம் ஹாரி பாட்டரை தீமாக கொண்ட ஒன்பிளஸ் வாட்ச்சின் ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வார்னர் ப்ரோஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (WBCP) உடன் இணைந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. Harry Potter Edition என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட்வாட்ச் ஹாரி பாட்டர் உரிமையைக் கொண்டாட தனிப்பயன் லோகோக்கள் மற்றும் தீம்களையும் கொண்டுள்ளது. சர்குலர் டிஸ்ப்ளே மற்றும் ஹாரி பாட்டர் தீம் லோகோக்கள் கொண்ட இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் ரூ.16,999 என்ற விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த லிமிட்டெட் எடிஷன் வாட்ச்சானது ஹாக்வார்ட்ஸ் க்ரெஸ்ட் (Hogwarts crest) பொறிக்கப்பட்ட ஒரு வீகன் லெதர் பேண்டுடன் (vegan leather band) வருகிறது. இந்த சமீபத்திய ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் டிசைனை தவிர சுமார் 110-க்கும் மேற்பட்ட வொர்க்அவுட் மோட்கள் உட்படபல ஃபிட்னஸ் அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஹார்ட் ரேட் சென்சார், ஸ்ட்ரெஸ் மானிட்டர் மற்றும் பிளட் ஆக்ஸிஜன் சேச்சுரேஷன் லெவல் (SpO2) சென்சார் உள்ளிட்டவற்றுடன் வருகிறது.

அதே போல வழக்கமான ஒன்பிளஸ் வாட்சைப் போலவே, தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிட்டெட் எடிஷனும் மற்ற ஒன்பிளஸ் டிவைஸ்களுடன் தடையற்ற கனெக்ஷனை வழங்குகிறது. இதன் மூலம் இந்த வாட்சை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒன்பிளஸ் டிவி போன்ற பிற டிவைஸ்களுடன் இணைக்க முடியும்.



இந்த ஹாரிபாட்டர் எடிஷன் வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் 2.5D கர்வ்டு கிளாஸ் ப்ரொடக்ஷனுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸிற்கான IP68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளது. ஹாரிபாட்டர் தீம் மற்றும் டிசைனை தவிர ஒன்பிளஸ் வாட்ச் ஸ்டாண்டர்ட் எடிஷனின் ஸ்பெசிஃபிகேஷன்களும், இந்த புதிய வாட்சின் ஸ்பெசிஃபிகேஷன்களும் பெரும்பாலும் ஒன்றே.

இந்த ஒன்பிளஸ் வாட்சை ஒன்பிளஸ் டிவி-களுக்கு ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம். மேலும் யூஸர்கள் வாட்சின் மெனு ஸ்கிரீனில் உள்ள ஐகான்களுக்கான அனிமேஷனையும் தேர்வு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய அம்சமாக ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன், வார்ப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Warp Charge fast charging) அம்சத்துடன் வருகிறது. இந்த டெக்னாலஜி 5 நிமிட சார்ஜிங் மூலம் ஒரு நாள் பயன்பாட்டிற்கு தேவையான சக்தியை அளிக்கும்.

Also read... Chat backup-களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்!

இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வது இந்த ஸ்மார்ட் வாட்ச்சிற்கு சுமார் 14 நாட்கள் வரை பேட்டரி பேக் அப் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.இந்த ஸ்மார்ட் வாட்ச் Bluetooth 5.0-வை கொண்டுள்ளது. இது தான் இந்த வாட்சை ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒன்பிளஸ் டிவிகளுடன் இணைக்க பயன்படுகிறது. இன்னும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி உள்ள இந்த ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன் வாட்ச்சானது ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ரெட் கேபிள் கிளப் ஆப் மற்றும் ஆஃப்லைன் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலம் வரும் அக்டோபர் 21-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: