ஒன்பிளஸ் புதிய லிமிடெட் எடிஷன் கோபால்ட் வாட்ச் – விலை, விவரக்குறிப்புகள்!

ஒன்பிளஸ் புதிய லிமிடெட் எடிஷன் கோபால்ட் வாட்ச்

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய லிமிடெட் எடிஷன் கோபால்ட் கைகடிகாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாங்க விருப்பமுள்ளவர்கள், OnePlus.in வலைத்தளத்தில் மற்றும் OnePlus Store App இல் ரூ.1,௦௦௦ செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • Share this:
சீன நாட்டைச் சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான OnePlus, ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பை, லிமிடெட் எடிஷனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மே மாதமே, சீனாவில் இந்த வாட்ச் விற்பனை தொடங்கிவிட்ட நிலையில், இந்த பதிப்பு, ஒன்பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்வாட்சாக, கோபால்ட் போன்ற உயர்தர மெட்டீரியலால் ஆனது. மேலும், நீடித்து உழைக்க, உறுதியாக வடிவமைப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோபால்ட் பதிப்பு ஒன்பிளஸ் வாட்ச், ஸஃபையர் கண்ணாடி மற்றும் மார்ச் மாதத்தில் அறிமுகமான இதன் அசல் பதிப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில், ஒன்பிளஸ் லிமிடெட் எடிஷன் கோபால்ட் வாட்ச் ரூ. 19,999 க்கு விற்பனையாக உள்ளது. வாடிக்கையாளர் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.

ஜூலை 10ம் தேதி வரை OnePlus.in வலைத்தளத்தில் மற்றும் OnePlus Store App இல் ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்வாட்ச் எங்கே எப்போது விற்பனைக்கு என்பது குறித்து அறிவிக்கப்படும். வாங்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை அதற்கான பணத்தை செலுத்த வேண்டும். ரூ 1,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் பதிப்பின் விலையில் குறைக்கப்படும்.

ALSO READ |  ஐரோப்பாவில் ‘OnePlus Pad’ - புதிய டேப்லெட் வெளியிடுகிறதா ஒன்ப்ளஸ்?

ஒன்பிளஸில் ஒரு அறிமுக சலுகை உள்ளது, ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பை எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ரூ .1,000 உடனடி தள்ளுபடியாகப் பெற்று வாங்க முடியும். இந்த சலுகை செப்டம்பர் 15 வரை செல்லுபடியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம்.



இந்த கோபால்ட் வாட்ச் லிமிடட் பதிப்பின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை, இதன் அசல் பதிப்பைப் போன்றது. இந்த வாட்ச்சில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும், சிறப்பாக டிரீட் செய்யப்பட்ட சஃபையர் கண்ணாடியுடன் வருகிறது.



மேலும், இதில் மேம்பட்ட பிராகாசம் மற்றும் கீறல் ஏற்படுவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் , 9 Mohs மதிப்பீடு பெற்ற ஸ்க்ராட்ச்-ரெசிஸ்டன்ட் உள்ளது. இதன் கேஸ், கோபால்ட் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  ஆண்ட்ராய்டு போன்களில் கோவிட் -19 தடுப்பூசி அட்டைகளை சேமிக்க அனுமதிக்கும் கூகுள் பாசஸ் ஏபிஐ!

முக்கிய விவரங்கள் :

* இந்தியாவில், ஒன்பிளஸ் லிமிடெட் கோபால்ட் எடிஷன் வாட்ச் விலை ரூ. 19,999
* ஒன்பிளஸ் வாட்ச்சில் காணப்படும் அதே ஸ்பெசிஃபிகேஷன்ஸ் மற்றும் அம்சங்கள் இந்த கோபால்ட் பதிப்பிலும் இருக்கிறது.
* ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பு, 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும், சிறப்பாக டிரீட் செய்யப்பட்ட சஃபையர் கண்ணாடியுடன் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: