Home » News » Technology » ONEPLUS USHERS IN THE 5G REVOLUTION IN INDIA RA

இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்தத் தயார்... புது ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு தயாராகும் ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் 5ஜி தொழில்நுட்பத்துடனே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்தத் தயார்... புது ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு தயாராகும் ஒன்ப்ளஸ்
ஒன்ப்ளஸ்
  • Share this:
இந்தியாவில் 5ஜி அறிமுகம் ஆக கால தாமதம் ஆகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடத் தயாராகி உள்ளது ஒன்ப்ளஸ்.

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் 5ஜி தொழில்நுட்பத்துடனே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் 5ஜி தொழில்நுட்பத்துடன் பல தயாரிப்புகளை முன்னோடியாக அறிமுகப்படுத்தி வரும் ஒன்ப்ளஸ் இந்தியாவிலும் வெற்றி காணும் என அதனது சிஇஓ பீட் தெரிவித்துள்ளார்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் வரவேற்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தனது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறதாம் ஒன்ப்ளஸ். இதற்காக ஹைதராபாத்தில் பிரத்யேக ஆய்வுக் கூடம் ஒன்றையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.




மேலும் பார்க்க: நீங்கள் அனுப்பும் மெசேஞ் மாயமாய் மறைய... வாட்ஸ்அப் செயலிக்கு வரும் புது அப்டேட்!
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading