OnePlus TV Y1S மற்றும் OnePlus TV Y1S Edge ஆகிய ஸ்மார்ட் டெலிவிஷன்கள் OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட் ஃபோனுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. OnePlus நிறுவனத்தின் இந்த புதிய டிவி சீரிஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஆகிய 2 வெவ்வேறு ஸ்கிரீன் சைஸ்க்ளில் வருகிறது. மொத்தம் 4 மாடல்களை கொண்டுள்ளது. மேலும் இந்த 2 டிவி சீரிஸ்களும் Android TV 11 platform மற்றும் டால்பி அட்மோஸிற்கான சப்போர்ட்டுடன் வருகின்றன.
மேலும் OnePlus TV Y1S மற்றும் OnePlus TV Y1S Edge ஆகியவை HDR10+, HDR10 மற்றும் HLG ஃபார்மெட் சப்போர்ட்டை பெறுகின்றன. கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் ஆட்டோ லோ லேட்டன்சி மோடை (auto low latency mode) இந்த டிவி-க்கள் கொண்டுள்ளதாக OnePlus நிறுவனம் கூறுகிறது.
OnePlus TV Y1S மற்றும் Y1S Edge-ன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை..
ஒன்பிளஸின் Y1S டிவி-யின் 32 இன்ச் விலை ரூ.16,499 மற்றும் 43-இன்ச் வேரியன்ட்டின் விலை ரூ.26,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் Y1S Edge 32 டிவி-யின் 32 இன்ச் மாடலின் விலை ரூ.16,999 மற்றும் அதன் 43-இன்ச் வேரியன்ட்டின் விலை ரூ.27,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு டிவி-க்களும் பிப்ரவரி 21 அன்று முதல் விற்பனைக்கு வர உள்ளது. இவற்றை OnePlus வெப்சைட், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல ஆஃப்லைன் விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம். OnePlus Red Cable Club மெம்பர்கள் Y1S மற்றும் Y1S Edge-ன் 32 இன்ச் மாடலில் ரூ.500 தள்ளுபடி பெறலாம். OnePlus TV Y1S Edge-ன் 43 இன்ச் வேரியன்ட் Red Cable Club மெம்பர்களுக்கு ரூ.750 தள்ளுபடியுடன் வழங்கப்படும்.
Y1S மற்றும் Y1S Edge ஸ்பெசிஃபிகேஷன்கள்..
இரண்டுமே ஸ்மார்ட் டிவி-க்களாக இருப்பதால் Android TV 11 மூலம் இயங்குகின்றன. இரண்டும் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளை பெறும் நேரத்தில் Y1S HD ரெசல்யூஷனை கொண்டுள்ளது. Y1S Edge full-HD ரெசல்யூஷனை பெறுகிறது. 2 ஸ்மார்ட் டிவிக்களும் HDR10, HDR10+, HLG ஃபார்மெட் சப்போர்ட்டை பெற்றுள்ளன. இவற்றின் டிஸ்ப்ளேக்கள் குறைந்த நீல ஒளி உமிழ்வுக்கான (low blue light emission.) TUV ரைன்லேண்ட் சான்றிதழை (TUV Rheinland certification) பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள் : ‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர் தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம்!
2 ஸ்மார்ட் டிவிக்களும் கூகுள் அசிஸ்டண்ட் சப்போர்ட்டை பெற்றுள்ளன. ஸ்மார்ட் மேனேஜரைப் பயன்படுத்தி, யூஸர்கள் சிஸ்டம் ஸ்பீட், ஸ்டோரேஜிங் ஸ்பேஸை ஃப்ரீ செய்வது உள்ளிட்ட பல ஸ்மார்ட் டிவி செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். தவிர OnePlus Connect 2.0 மூலம் யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை டிவி-க்களுடன் கனெக்ட் செய்ய முடியும் மற்றும் அவற்றை ரிமோட் கண்ட்ரோலாகவும் பயன்படுத்த முடியும்.
கனெக்டிவிட்டிக்காக OnePlus TV Y1S சீரிஸ் 5GHz பேண்ட் சப்போர்ட்டுடன் டூயல்-பேண்ட் வைஃபையை பெறுகிறது. Y1S மாடல்கள் 20W ஃபுல்-ரேஞ்ச் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை பெறுகின்றன. அதே நேரத்தில் Y1S Edge மாடல்கள் 24W ஃபுல்-ரேஞ்ச் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை பெறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: One plus