ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

OnePlus TV 55 Y1S Pro வெளிவந்துள்ளது: உயர்தரத்தில், குறைந்த விலையில், பெரிய திரையுடன் ஸ்மார்ட் ஹோம் பொழுதுபோக்கை வழங்குகிறது.!

OnePlus TV 55 Y1S Pro வெளிவந்துள்ளது: உயர்தரத்தில், குறைந்த விலையில், பெரிய திரையுடன் ஸ்மார்ட் ஹோம் பொழுதுபோக்கை வழங்குகிறது.!

oneplus

oneplus

OnePlus TV 55 Y1S Pro | சுற்றுச்சூழல் அமைப்புடன் புத்திசாலித்தனமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட OnePlusஸின் மூலம் உங்கள் டிவிகூட ஸ்மார்ட் ஹோம் சென்டராகச் செயல்படலாம். உதாரணமாக, OnePlus Buds மற்றும் Buds Pro ஆகியவற்றுடன் புத்திசாலித்தனமான முறையில் இணைக்கப்பட்ட உங்கள் டிவியில் Google Assistantடை அணுகலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

OnePlus TV 55 Y1S Pro இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இருக்குமென சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. புதிய OnePlus TV oneplus55 Y1S Pro கவர்ச்சிகரமான வடிவமைப்பில் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் உயர்தர, பெரிய 4K டிஸ்ப்ளேவை வழங்குகிறது.

"உயர் தரம்" என்று எதைக் குறிப்பிடுவோம்? HDR10, HDR10+ மற்றும் HLG, அருமையான ஸ்பீக்கர்கள் மற்றும் நமது காட்சி அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்களின் ஆதரவுடன் 1 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களில் 4K UHD தரத்தை வழங்கும் டிவியை இப்படி குறிப்பிடுவதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

Y1S சீரிஸை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் மற்ற பல அம்சங்களும் இந்த பெரிய வெர்சனில் உள்ளன. பயனர்களுக்கு சிறந்த நேவிகேஷன் அனுபவத்தை வழங்கும் Android 10 அடிப்படையிலான OxygenPlay 2.0 ஆபரேட்டிங் சிஸ்டம், பயன்படுத்தும்போது வண்ணங்களை மேம்படுத்தும் காமா எஞ்சின், கேம்ஸ் மற்றும் அது போன்ற பிற ஆப்ஸில் மென்மையான மற்றும் உயிரோட்டமான இயக்கத்த்தை வழங்கும் MEMC ஆகியவை அடங்கும்.

சர்வதேச மற்றும் உள்ளூர் உள்ளடக்கத்தையும், 230க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களையும் பயன்படுத்த எளிதான ஒரே இடைமுகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் OxygenPlay 2.0 உங்கள் அனுபவத்தைச் சிறந்ததாகவும், தடையற்றதாகவும் மாற்றுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்புடன் புத்திசாலித்தனமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட OnePlusஸின் மூலம் உங்கள் டிவிகூட ஸ்மார்ட் ஹோம் சென்டராகச் செயல்படலாம். உதாரணமாக, OnePlus Buds மற்றும் Buds Pro ஆகியவற்றுடன் புத்திசாலித்தனமான முறையில் இணைக்கப்பட்ட உங்கள் டிவியில் Google Assistantடை அணுகலாம். மேலும் OnePlus வாட்சை ஸ்மார்ட் ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம். சொல்லப்போனால், டிவி ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் தூங்கிவிட்டதை ஸ்மார்ட்வாட்ச் கண்டறிந்தால் தானாகவே டிவியை ஆஃப் செய்யும்.

கூடுதலாக, டிவியுடன் ஒரே நேரத்தில் 5 சாதனங்களை இணைத்து ஃபோனை ரிமோட்டாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் Wi-Fi மற்றும் டேட்டாவைப் பயன்படுத்தி உங்கள் OnePlus ஸ்மார்ட்போனிலிருந்து உள்ளடக்கங்களைத் தடையின்றிப் பிறருக்கு எளிதாக அனுப்பலாம்.

24W பவர் அவுட்புட் கொண்டு உள்ளமைக்கப்பட்ட முழு ஆற்றல் கொண்ட ஸ்பீக்கர் டிரைவர்கள், Dolby Audioவை ஆதரிப்பதன் மூலம் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகின்றன. ஒரு பெரிய மண்டபத்திற்கு கிடைக்கும் போதுமான ஆற்றலை விட இது அதிகம்.

OnePlus.in, Amazon.in, Flipkart, ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் OnePlus எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் அனைத்தும் தற்போது இந்த அதிநவீன பெசல் ஃப்ரீ டிவியை ரூ.39,999க்கு விற்பனை செய்கின்றன. அனைத்து முக்கிய வங்கிகளும் ஒன்பது மாதங்கள் வரையிலான கட்டணமில்லா EMI சேவையை இந்த ஃபோனிற்காக வழங்குகின்றனர்.

First published:

Tags: Oneplus, Tamil News, Technology