ஸ்மார்ட் ஃபோன் டிவி என எந்தவொரு ஒன்ப்ளஸ் தயாரிப்புகள் சந்தைக்கு வந்தாலும் அதனை வாங்குவதற்கு டிமான்ட் நிலவும். இந்நிலையில் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்ப்ளஸ் டிவி 40Y1 என்ற டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 40 இஞ்ச் டிவியானதது ஆண்ட்ராய்டு டிவி 9 ஆக்ஸிஜன் பிளே மற்றும் டால்பி அட்மாஸ் வசதியுடன் கிடைக்கிறது. இந்த ஒன்பிள்ஸ்-ன் டிவி 40Y1 ஆனது 32 இஞ்ச் முதல் 43 இஞ்ச் வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
முழு கருப்பு வண்ணம் கொண்ட இந்த டிவியானது 23,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டிவி ஜூன் 1 முதல் ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டில் கிடைக்கும். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமோ அல்லது EMI மூலமோ இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஆமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட், மூலம் வாங்கினால் 5 சதவிகித தள்ளுபடியும், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் எஸ்பிஐ வங்கி EMI கார்ட் மூலம் வாங்கினால் 6 மாதங்களுக்கு வட்டியில்லா EMI வசதி ஆகியவை கிடைக்கும்.
இந்த ஒன்ப்ளஸ் டிவி 40Y1 ஆனது 40 இஞ்ச் முழு ஹெச்டி டிஸ்பிளேவுடன் 93 சதவிகித screen-to-body ratioவில் கிடைக்கிறது. இது 93 சதவிகித DCI-P3 கலர் ஸ்பேஸ் கவரேஜ் மறறும் இன் ஹவுஸ் கம்மா இன்ஜின் வீடியோ பார்க்கும் போது சிறப்பான அனுபவத்தை தரும்.
இதில் HDMI போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் ஈத்தர்நெட் போர்ட் கொண்டுள்ளது. மேலும் ப்ளூடுத், வைஃபை ஆப்சன்களும் உண்டு. இதன் மூலம் உங்கள் போன் மற்றும் லேப்டாப்பை கனெக்ட் செய்ய முடியும். மேலும் டிவியில் இண்டர்நெட் கணெக்ட் செய்து யூடியூப் போன்றவற்றை கண்டுகளிக்கலாம். இது குரோம்கேஸ்ட் கூகுள் பிளே ஸ்டோர் வசதிகள் உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் அலெக்ஸ் வாய்ஸ் அசிஸ்டென்ட் இதில் உண்டு.
இந்த டிவி 64-பிட் பிராசெஸர் மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த டிவியானது ஆக்ஸிஜன்ப்ளேவை அடிப்படையாகக் கொண்ட ஆண்டிராய்டு டிவி 9.0 pie ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. இந்த டிவி டால்பி ஆடியோவின் சப்போர்ட்டுடன் இயங்கும் 20W 2 சேனல் ஸ்பீக்கர்ஸ் கொண்டுள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கும். இந்த ஆப் ஒன்ப்ளஸ் கனக்ட் ஆப் கொண்டுள்ளதால் உங்கள் ஸ்மார்ட் போன் கொண்டு டிவியை இயக்க முடியும். பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி நல்ல சாய்ஸ்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google Chrome, India, One plus, Play store, Smart tv