ஸ்மார்ட் டிவி சந்தையில் 4K OLED உடன் களமிறங்குகிறது ஒன்ப்ளஸ்..!

ஜியோமியின் Mi எல்இடி டிவி-க்குப் பெரும் போட்டியாக ஒன்ப்ளஸ் டிவி வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Web Desk | news18
Updated: August 13, 2019, 9:09 PM IST
ஸ்மார்ட் டிவி சந்தையில் 4K OLED உடன் களமிறங்குகிறது ஒன்ப்ளஸ்..!
ஒன்ப்ளஸ் (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: August 13, 2019, 9:09 PM IST
ஒன்ப்ளஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவி சந்தையில் களம் இறங்க உள்ளது.

கடந்த ஆண்டு ஒன்ப்ளஸ் நிறுவனர் மற்றும் தலைவரான பீட் லா, புதிதாக ஸ்மார்ட் டிவி-க்கான புதிய பிரிவை தனது நிறுவனத்தில் தொடங்கிய போதே எதிர்பார்ப்புகள் எழத்தொடங்கின. இதையடுத்து இந்தாண்டின் இறுதிக்குள் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்திகளின் அடிப்படையில் வருகிற செப்டம்பர் மாதம் 25 முதல் 30-ம் தேதிகளுக்கு இடையே ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி வெளியாகும் என்று கூறப்படுகிறது. சில சான்றிதழ் அறிக்கைகள் லீக் ஆனது மூலம் இத்தகவல்கள் வெளியாகி இருக்கலாம்.


மேலும், வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் OLED பேனல் உடன் ஒன்ப்ளஸ் டிவி வரலாம். 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஆகிய நான்கு ரகங்களின் கீழ் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகலாம். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே முதற்கட்டமாக இந்த டிவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளுடூத் 5.0 உடன் முற்றிலும் மாறுபட்ட டிவி அனுபவத்தை ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி வழங்கும் எனத் தெரிகிறது. ஹெச்டிஆர் துணையுடன் 4K ரெசொலியூஷன் உடன் இந்த டிவி வரும் எனக் கருதப்படுகிறது. ஜியோமியின் Mi எல்இடி டிவி-க்குப் பெரும் போட்டியாக ஒன்ப்ளஸ் டிவி வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க: ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ்பேக்- ரிலையன்ஸ் டிஜிட்டலின் சுதந்திர தின ஆஃபர்..!
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...