முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பிடித்ததாக புகார் கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ்!

ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பிடித்ததாக புகார் கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ்!

one plus nord 2 5g phone

one plus nord 2 5g phone

புதிதாக வாங்கியிருந்த ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதாக புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் வழக்கறிஞர் கவுரவ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி மாடல் ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறிய விவகாரத்தை வெளிப்படுத்திய வழக்கறிஞருக்கு ஒன் பிளஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான கவுரவ் குலாதி என்பவர், இந்த மாத தொடக்கத்தில் தான் புதிதாக வாங்கியிருந்த தன்னுடைய ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதாக புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். வழக்கறிஞர் கோட்டில் வைத்திருந்த போது ஒன் பிளஸ் மொபைல் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்ததால் தன்னுடைய வயிற்றுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டதாகவு அவர் கூறியிருந்தார். மேலும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு குறித்தும் சில கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்த விவகாரத்தில் ஒன் பிளஸ் நிறுவன பிரதிநிதிகள் வழக்கறிஞர் கவுரவை சந்தித்து பேசி, வெடித்துச் சிதறிய அந்த மொபைலை சோதனைக்காக கேட்ட போது, ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த மொபைலை அவர், அந்நிறுவன அதிகாரிகளிடம் வழங்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கவுரவுக்கு, ஒன் பிளஸ் நிறுவனத்தார் சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர் கவுரவ் தங்கள் நிறுவனத்தை அவமதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவதூறாக கருத்துக்கள் கூறி செயல்பட்டு வருவதால் அவர் ஒன் பிளஸ் நிறுவனத்திடம் நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் எனவும் ஒன் பிளஸ் மற்றும் அதன் பொருட்கள் குறித்து கவுரவ் எந்தவித அவமதிப்பு கருத்துக்களும் இனி கூறக்கூடாது எனவும், சமூக வலைத்தளத்தில் ஒன் பிளஸ் குறித்து ஏற்கனவே பதிவிட்டிருந்த பதிவுகளையும் நீக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

இதனிடையே இது போன்ற நிகழ்வை வெளிப்படுத்தியதற்காக ஒன் பிளஸ் நிறுவனம் எனக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கியிருப்பதாக வழக்கறிஞர் கவுரவ் அந்த நோட்டீஸையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஒன் பிளஸ் நிறுவனம் நார்ட் மாடல் மொபைல் விற்பனையை கடந்த ஆண்டு தொடங்கியது, அதன் தொடர்ச்சியாக நார்ட் 2 மாடலை இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது.

Also Read:    சென்னை வரும் சொகுசு சுற்றுலா கப்பல்.. சிறப்புகள் என்ன?

வழக்கறிஞர் கவுரவ் தவிர்த்து, பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த மாதம் தான் புதிதாக வாங்கியிருந்த நார்ட் 2 மொபைல், கைப்பையில் வைத்திருந்த போது வெடித்து சிதறியதாக புகார் கூறியிருந்தார். ஆனால் அந்த வெடிப்பு வெளிப்புற காரணங்களால் நடந்ததாக ஒன் பிளஸ் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: One plus, Smart Phone, Technology