முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / One Plus - Oppo: சிறந்த தயாரிப்புகள், வேகமான சாஃப்ட்வேர் அப்டேட்களுக்காக ஒப்போவுடன் கைகோர்த்த ஒன்பிளஸ் நிறுவனம்.!

One Plus - Oppo: சிறந்த தயாரிப்புகள், வேகமான சாஃப்ட்வேர் அப்டேட்களுக்காக ஒப்போவுடன் கைகோர்த்த ஒன்பிளஸ் நிறுவனம்.!

ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இரண்டும் ஏற்கனவே BBK Electronics நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக இருக்கின்றன என்பதால் அவை எப்போதும் இணைக்கப்பட்டு?

ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இரண்டும் ஏற்கனவே BBK Electronics நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக இருக்கின்றன என்பதால் அவை எப்போதும் இணைக்கப்பட்டு?

ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இரண்டும் ஏற்கனவே BBK Electronics நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக இருக்கின்றன என்பதால் அவை எப்போதும் இணைக்கப்பட்டு?

 • Last Updated :

  2014-ல் முதன் முதலில் அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் செல்போன் பிரியர்களின் பெரும் வரவேற்பை பெற்று தற்போது  மக்களை கவர்ந்த ஒரு பிராண்டாக இருக்கிறது. குவாங்டாங்கின் ஷென்சென் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஒன்பிளஸ் ஒரு சீன ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாகும். இது முன்னாள் ஒப்போ துணைத் தலைவர் பீட் லாவ் மற்றும் கார்ல் பீ ஆகியோரால் 2013 டிசம்பரில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பி.கே.கே எலெக்ட்ரானிக்ஸ் (BBK Electronics) நிறுவனத்தின் மூன்று துணை நிறுவனங்களில் ஒன்றாகும், ஒப்போ மற்றும் விவோ ஆகியவை அடங்கும். ஒன்பிளஸ் தனது முதல் ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் ஒன்னை கடந்த 2014-ல் அறிமுகப்படுத்தியது.

  2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறைய சாதித்துள்ளது. flagship killer brand என்று அழைக்கப்பட்ட ஒன்பிளஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் மூலோபாயத்தை பெரிதும் மாற்றிவிட்டது. இது இப்போது பிரீமியம் முதன்மை சந்தையின் (premium flagship market) ஒரு பகுதியாகும். இப்போது இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்போவுடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது. பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இரண்டு பிராண்டுகளும் கடந்த ஒரு வருடமாகவே ஒரு மட்டத்தில் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்போவுடன் இணைகிறது.

  Also Read:   புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

  இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்பிளஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் (Pete Lau), "ஒப்போவுடனான ஆழமான ஒருங்கிணைப்பு ஒன்பிளஸ்ஸை சிறந்த தயாரிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு வேகமான மற்றும் நிலையான (stable) சாஃப்ட்வேர் அப்டேட்களை வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகிய இரண்டிற்குமான தயாரிப்பு மூலோபாயத்தை மேற்பார்வையிட லாவ் கூடுதல் பொறுப்புகளை ஏற்று கொண்ட பின் ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒருங்கிணைவு தற்போது ஏற்பட்டுள்ளது. தனது வலைப்பதிவில் பீட் லாவ் "merge" அதாவது முழுமையாக ஒன்றிணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ஒப்போவுடன் தங்கள் நிறுவனத்தை முழுமையை உருவாக்குவதற்கான வழிமுறையாக "integrate" செய்வதாகவே குறிப்பிட்டுள்ளார். இதன்படி அணிகளை ஒருங்கிணைத்தல் (integrating teams) மற்றும் வளங்களைப் பகிர்வது (sharing resources) போன்ற விஷயங்களை இது உள்ளடக்கும் என்று தெரிகிறது. ஒன்ப்ளஸ் பிராண்ட் மற்றும் ஒப்போ இரண்டும் தனித்தனியாகவே இருக்கும் மேலும் இரு நிறுவனங்களும் தொடர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

  Also Read:     தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

  ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இரண்டும் ஏற்கனவே BBK Electronics நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக இருக்கின்றன என்பதால் அவை எப்போதும் இணைக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்த புதிய அறிவிப்பின் மூலம் இரண்டு பிராண்டுகளும் அவற்றின் செயல்பாடுகளை சீராக்க மற்றும் கூடுதல் பகிரப்பட்ட வளங்களை முதலீடு செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையே இது என்பதை லாவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

  தற்போது இரு நிறுவனங்கள் இடையே அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்பிளஸின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, சாஃப்ட்வேர் அப்டேட்களை விரைவாக வர அனுமதிக்கும். மேலும் இந்நடவடிக்கை மூலம் அவை இன்னும் நிலையானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  top videos

   இந்த மாற்றம் நம் சமூகத்திற்கும் எங்கள் யூஸர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒப்போவுடனான இந்த ஆழமான ஒருங்கிணைப்பின் மூலம், உங்களுக்காக இன்னும் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க எங்களிடம் அதிக ஆதார வளங்கள் இருக்கும். இது எங்கள் தயாரிப்புகளை இன்னும் திறம்பட வெளிவர அனுமதிக்கும் என்று பீட் லாவ் தெரிவித்துள்ளார்.

   First published: