முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இவ்வளவு ரேட் கம்மியா? ஸ்மார்ட் வாட்ச் விலையை அதிரடியாக குறைத்த ஒன்பிளஸ்!

இவ்வளவு ரேட் கம்மியா? ஸ்மார்ட் வாட்ச் விலையை அதிரடியாக குறைத்த ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்

ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்

ஒன்பிளஸ் நிறுவனம், மலிவு விலையில் நோர்ட் பிராண்டட் ஸ்மார்ட்வாட்சை கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் வாட்ச் என்பது ஆடம்பரம்  என்பதைத் தாண்டி  சிலருக்கு தேவையான பொருளாக மாறி வருகிறது. தற்போது ரூ.500 முதல் ஸ்மார்ட்வாட்ச்கள் கிடைக்கிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது நோர்ட் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஒரு பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், மலிவு விலையில் நோர்ட் பிராண்டட் ஸ்மார்ட்வாட்சை கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அந்த வாட்ச்களின் இந்திய விலையை தற்போது மேலும் ரூ. 500 வரை குறைந்து அறிவித்துள்ளது.  ரூ.4,999க்கு அறிமுகப்படுத்திய நோர்ட் வாட்சுகள் தற்போது  ரூ.4,499க்கு விற்கப்படுகிறது.

OnePlus Nord வாட்ச்  பொறுத்தவரை  1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சூரியனுக்குக் கீழே எளிதாகத் தெரிவதற்கு 500nits பிரகாசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.  ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் அணிபவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும். நடக்கும் தூரம், கலோரி அளவீடு மற்றும் தூக்கத்தின் தரம் போன்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்யும்.

நோர்ட் வாட்ச் இரண்டு நிமிடங்களுக்குள் தனிப்பட்ட சுகாதார சுருக்கத்தை உருவாக்க முடியும் என்று OnePlus கூறுகிறது. இந்த பட்டியலில் அணிந்தவரின் இதயத் துடிப்பு, மன அழுத்த நிலைகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு (SpO2) ஆகியவற்றைக் காட்டுகிறது. ஸ்மார்ட்வாட்ச் 105 ஃபிட்னஸ் மோடுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் அணிந்திருப்பவர் ஓட்டம் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தானாகவே ஸ்டேப் கணக்குகளை தொடங்கிவிடும்.

OnePlus Nord வாட்ச்  ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் iOS 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களுடன்  இணக்கமாக வேலை செய்கிறது. ஸ்மார்ட்வாட்சை அணிந்திருப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க N Health ஆப்ஸ் பயன்படுத்திகொள்ளலாம். போன் மூலமாகவே ஆரோக்கிய நிலைகளை கண்காணித்து கொள்ளலலாம்.

கூடுதலாக இது பெண்களை மையமாகக் கொண்ட அம்சங்களுடன் வருகிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்க தனி அம்சம் உருவாக்கப்ட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, பயன்பாட்டில் 10 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நோர்ட் ஸ்மார்ட் வாட்சுகள்  தற்போது  மிட்நைட் பிளாக் மற்றும் டீப் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

இதனுடன், நிறுவனம் OnePlus Nord Watch வாங்குபவர்களுக்கு சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது . அதன்படி வாடிக்கையாளர்கள் ICICI வங்கி கிரெடிட் கார்டில் 500 ரூபாய் வரை  உடனடி தள்ளுபடியைப் பெறமுடியும். அதேபோல், MobiKwik Wallet பயனர்கள் OnePlus Nord வாட்சை வாங்கும்போது 500 ரூபாய் வரை கேஷ்பேக் பெற  முடியும். நீங்கள் பட்ஜெட் விலையில்  நல்ல ஸ்மார்ட் வாட்ச் தேடிக்கொண்டு இருந்தால் இதை ட்ரை பண்ணுங்க.


First published:

Tags: Gadgets, Offer, Oneplus