இந்தியாவில் ஜூன் 10-ம் தேதி அறிமாகமுள்ள புதிய Oneplus மாடல்... சிறப்பம்சங்கள் என்ன?

அமேசானில் வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் CE 5G குறைந்தது 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் வரும் என்பதும் தெரிய வந்துள்ளது.

  • Share this:
    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான முதல் தலைமுறை ஒன்பிளஸ் நோர்டைப் போலவே, வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் CE 5G ஒரு மாத்திரை வடிவ பின்புற கேமரா தொகுதியுடன் வரும் என்று ஒன்பிளஸ் வெளியிட்ட டீசரை மூலம் தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் சமூக ஊடக சேனல்களில் வெளியான விளம்பர வீடியோவில் இந்த வடிவமைப்பு டீஸ் செய்யப்பட்டது. மறுபுறம், அமேசானில் வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் CE 5G குறைந்தது 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் வரும் என்பதும் தெரிய வந்துள்ளது.

    91மொபைல்ஸ் சேகரித்த விவரங்கள் அடிப்படையில், வரவுள்ள ஸ்மார்ட்போன் சார்க்கோள் இன்க் கலர் பினிஷுடன் வெளியாகும் என்பதை குறிப்பிட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் நோர்ட் தொலைபேசி வருகிற ஜூன் 10ம் தேதி அன்று நிறுவனத்தின் கோடைகால வெளியீட்டு நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே நிகழ்வில் புதிய TV U1S ஸ்மார்ட் டிவியும் வெளியாகிறது.

    இருப்பினும், ஒன்பிளஸ் நோர்ட் CE 5G ஹார்டுவேரின் விவரக்குறிப்புகள் குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ப்ராசெசர் சாம்சங் கேலக்ஸி A52 5G மற்றும் சியோமி Mi 10i போன்ற குறிப்பிடத்தக்க மிட் ரேஞ்சர்களுக்கும் சக்தி அளிக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் CE 5G ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் AMOLED பேனலை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. அதாவது முதல் தலைமுறை நோர்டைப் போலவே இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மூன்று பின்புற கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கலாம் என்றும், 16 மெகாபிக்சல் ஷூட்டரைப் பெறலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. கேமரா தொடர்பாக கசிந்த தகவல்கள் என்னவென்றால், டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் (ஒன்லீக்ஸ்) எழுதிய பழைய அறிக்கையின்படி, இந்த தொலைபேசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாத நோர்டு N 10 5G போலவே பல ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    Also Read : 8 நிமிடங்களில் மொபைலுக்கு ஃபுல் சார்ஜ் - புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சியோமி உலக சாதனை!

    இந்தநிலையில், புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமான பிறகு, ஜூன் 11 முதல் தொலைபேசி முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என்றும் ஜூன் 16 முதல் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ஒன்பிளஸ் நிறுவனம் ஜூன் 25 அன்று ஒன்பிளஸ் நோர்ட் 2-ஐ அறிமுகம் செய்வதாக வெளியான தகவலும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC இல் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

     
    Published by:Vijay R
    First published: