OnePlus Nord CE 5G வாங்கப் போறீங்களா? ப்ரீ ஆர்டர் கேஷ்பேக் மற்றும் டிஸ்கவுண்ட்களை தெரிந்து கொள்ளுங்கள்!

OnePlus Nord CE 5G வாங்கப் போறீங்களா

கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன் விலையை விட இப்போது அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட்போன் விலை வாங்கும் வகையில் உள்ளது.

  • Share this:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர்கள் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான காஷ்பேக் மற்றும் டிஸ்கவுண்டுகளை வாரி வழங்கியுள்ளன.

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய வரவாக ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன் விலையை விட இப்போது அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட்போன் விலை வாங்கும் வகையில் உள்ளது. 3 விதமான வேரியண்டுகளில் ஒன்பிளஸ் நோர்டு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு திறன் உள்ள ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் 22, 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு ஸ்மார்ட்போன் 24,999 ரூபாய்க்கும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு திறனுள்ள ஸ்மார்ட்போன் 27,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான், குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய ஆன்லைன் தளங்கள் வழியாக ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யலாம். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு, ஆன்லைன் தளங்களுக்கு ஏற்ப டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் ஸ்டோரில், ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5ஜியை ஹெச்.டி.எப்.சி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்குகிறீர்கள் என்றால், ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மாதாந்திர தவணைக்கு மாற்றுபவர்களுக்கும் இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. நோ காஸ்ட் இ.எம்.ஐ சலுகை 6 மாதங்கள் வரை கொடுக்கப்படுகிறது. மேலும், 22,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் சார்கோல் இன்க் கலரில் மட்டுமே கிடைக்கும். மற்ற இரண்டு வேரியண்ட் மொபைல்களும் ப்ளூ வாய்டு மற்றும் சில்வர் ரே கலர்களில் கிடைக்கும்.

Also read... Jio: உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ - பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கை!

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கினால் 5% காஷ்பேக் சலுகை கொடுக்கப்படுகிறது. ஒன்பிளஸ் தளத்தில் ஆர்டர் செய்யும் முதல் 2 ஆயிரம் ஆர்டர்களுக்கு OnePlus Nord Handy Fanny Pack இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், 500 ரூபாய் மதிப்புள்ள ஒன்பிளஸ் பட்ஸ் z வையர்லெஸ் இயர்பட்ஸ், ஒன்பிளஸ் பேன்ட் கூடுதலாக வழங்கப்படும்.

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை, ஹெச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.1000 டிஸ்கவுண்டும், 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ சலுகையும் வழங்கப்படுகிறது. 500 ரூபாய் அமேசான் பே கூப்பன் சலுகையும் வழங்குகிறது. ஜியோ யூசர்களுக்கு 999 ரூபாய் பில் பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால் 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் சப்ஸ்கிரிப்சன் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. விஜய் சேல்ஸ், விற்பனையை தொடங்கும்போது ஹெச்.டி.எப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு யூசர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்கள் கொடுக்கப்படும் என கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: