ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிப்ரவரி 17-ல் அறிமுகமாக உள்ள OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோன்.!

பிப்ரவரி 17-ல் அறிமுகமாக உள்ள OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோன்.!

 ஸ்மார்ட் ஃபோன்

ஸ்மார்ட் ஃபோன்

OnePlus Nord CE 2 : இந்த ஸ்மார்ட் ஃபோன் OnePlus Nord CE-யை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த OnePlus Nord CE 2 5G-ன் அறிமுகத்திற்கு முன்னதாக OnePlus நிறுவனம் ஒரு சிறிய டீஸரை பகிர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் மற்றொரு Nord சீரிஸ் ஃபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தனது OnePlus Nord CE 2 எனப்படும் 5G ஸ்மார்ட் ஃபோனை வரும் பிப்ரவரி 17-ல் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. OnePlus நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களுக்குள்ளாகவே விரைவில் அறிமுகமாக உள்ள OnePlus Nord CE 2 5G-ன் விலைகள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றிய சில தகவல்கள் லீக்காகி உள்ளன. மேலும் இது சமீபத்திய காலங்களில் வெளியாகும் ஒன்பிளஸ் பிராண்டின் மிகவும் மலிவு விலை டிவைஸாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் OnePlus Nord CE-யை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த OnePlus Nord CE 2 5G-ன் அறிமுகத்திற்கு முன்னதாக OnePlus நிறுவனம் ஒரு சிறிய டீஸரை பகிர்ந்துள்ளது. இது மொபைலின் டிசைன் மற்றும் சில ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றிய பார்வையை வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில் புதிய ஸ்மார்ட் ஃபோனின் ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் அம்சங்கள் குறித்து லீக் ஆகியுள்ள தகவல்களை இப்போது பார்க்கலாம்.

OnePlus Nord CE 2 5G மொபைலின் எதிர்பார்க்கப்படும் விலை..

OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட் ஃபோனின் விலைகள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் ஒரு டிப்ஸ்டர் மூலம் வெளியே கசிந்துள்ளது. இந்த புதிய மொபைல் இந்தியாவில் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் என 2 வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் பேஸ் மாடலான 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் மொபைலின் விலை ரூ.23,999-ஆக இருக்கலாம் என்றும், 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.24,999-ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

மற்றொரு பிரபல டிப்ஸ்ர் ஒருவரின் கூற்றுப்படி OnePlus Nord CE 2 மொபைலானது 6.43-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வரலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் (octa-core MediaTek Dimensity 900 chipset) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 8GB வரையிலான RAM-உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய OnePlus Nord CE 2 5G மொபைலானது 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெர்ஷரி சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம். முன் பக்கம் 16 மெகாபிக்சல் ஷூட்டர் செல்ஃபி மேமராவை கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : ஐபோன் & விண்டோஸ் யூஸர்களுக்காக இந்த டிசைன் மாற்றங்களை டெஸ்ட்டிங் செய்யும் WhatsApp!

மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 4,500mAh பேட்டரி பேக்கை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. தவிர ஸ்மார்ட் ஃபோனின் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படும் என தெரிகிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை மைக்ரோSD கார்டு ஸ்லாட்டைத் தவிர இந்த மொபைல் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஒரு USB டைப்-C போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களை பெறும் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: One plus, OnePlus 8T 5G