முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய OnePlus Nord 2T இந்தியாவில் எப்போது அறிமுகம், விலை என்ன.! லீக்கான தகவல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய OnePlus Nord 2T இந்தியாவில் எப்போது அறிமுகம், விலை என்ன.! லீக்கான தகவல்

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

OnePlus Nord 2T India : OnePlus Nord 2T ஸ்மார்ட் ஃபோனின் விலை ரூ.30,000-க்குள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

OPPO-வுடன் இணைந்ததிலிருந்து OnePlus அதன் போர்ட்ஃபோலியோ முழுவதையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. கடந்த வாரம் OnLeaks வெளியிட்ட தகவலின் படி சீன ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளரான் OnePlus நிறுவனம், அதன் Nord 2T என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இதனிடையே OnePlus நிறுவனம் தனது புதிய OnePlus Nord 2T மொபைலை வரும் மே மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

91Mobiles-ன் அறிக்கைபடி, இந்த புதிய ஃபோன் MediaTek 1200 சிப்செட்டைக் கொண்டுள்ள தற்போதைய OnePlus Nord 2-க்குப் பின் வரும் என தெரிகிறது. இதனிடையே OnePlus நிறுவனம் தனதுOnePlus Nord CE2 என்ற புதிய 5G மொபைலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மறுபுறம் OnePlus நிறுவனத்தின் தற்போதைய முதன்மையான OnePlus 10 Pro மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. மேலும் ஏற்கனவே சீனாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு OnePlus 10 Pro கிடைக்கிறது.

OnePlus Nord 2T-யின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை:

எதிர்பார்க்கப்படும் விலை.. OnePlus Nord 2T ஸ்மார்ட் ஃபோனின் விலை ரூ.30,000-க்குள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 12GB + 256GB என்ற ஹை வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் விலை ரூ.30,000 - ரூ.40,000 வரை இருக்கலாம் என தெரிகிறது. தற்போது OnePlus Nord 2 மொபைலின் பேசிக் மாடலான 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.27,999-ல் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் :  உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்து, தரவுகளை நீக்குவது எப்படி?

அதே நேரத்தில் 8GB ரேம் கொண்ட அதே ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. டாப்-எண்ட் வேரியன்ட்டான 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.34,999 ஆகும். Nord 2 -ன் ஸ்பெஷல் Pac-Man வெர்ஷனும் உள்ளது, இதன் விலை 12GB ரேம் ஆப்ஷனின் விலை ரூ.37,999 ஆகும்.

எதிர்பார்க்கப்படும் ஸ்பெசிஃபிகேஷன்கள்..

ஸ்பெசிஃபிகேஷன்களின் அடிப்படையில் புதிய OnePlus Nord 2T மொபைலானது மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒன்பிளஸ் 6T-ல் தொடங்கி அதன் ‘டி’-சீரிஸ் ஃபோன்கள் என சிறந்த ஸ்பெசிஃபிகேஷன்களை பெற்றுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கைகள் புதிய OnePlus Nord 2T மொபைலானது 6.43-இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வர கூடும் என்பதை எடுத்து காட்டுகிறது. மேலும் இந்த மொபைல் MediaTek Dimensity 1300 சிப்செட் ப்ராசஸரை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பிற உறுதி செய்யப்படாத ஸ்பெசிஃபிகேஷன்களில் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 4,500mAh பேட்டரி, பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டப் (50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல்) மற்றும் 32-மெகாபிக்சல் செலஃபி கேமரா ஆகியவை அடங்கும்.

First published:

Tags: Mobile phone, One plus, Smartphone