• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் குறித்த விவரம்!

ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் குறித்த விவரம்!

ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man

ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man

சார்ஜ் செய்யும் போது, Pac-Man தீமின் அடிப்படையில் அனிமேஷன் காட்சிகள், ரிங்டோன்கள், ஐகான்ஸ், Pac-Man அடிப்படையில் டிசைன் செய்யப்பட்ட ஃபிங்கர்லாக் பிரின்ட் அனலாக் செய்யும் முறை மற்றும் பல உள்ளன.

  • Share this:
பல டீசர்களும், செய்திகளும், வெளியான நிலையில், ஒரு வழியாக ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man வெர்ஷன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகிவிட்டது. இந்த புதிய பதிப்பில், மொபைலின் இன்டர்ஃபேசில், விஷுவல் மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஒரிஜினல் ஒன்ப்ளஸ் நார்ட் 2 மொபைலில் இருக்கும் ஸ்பெசிஃபிகேஷன் போலவே தான் இந்த லிமிடட்-எடிஷன் பதிப்பான ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Manல் காணப்படுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man, இரண்டு கான்ஃபிகரேஷனில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 37,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 முதல் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

முதலாவதாக, இந்த மாடல் உங்களுக்கு 12GB/256GB என்ற வேரியன்ட்டுடன் வருகிறது. இதன் விலை, ஏற்கனவே சந்தையில் இதே கான்ஃபிகரேஷனில் இருக்கும் OnePlus Nord மாடலுடன் ஒப்பிடும் போது, ரூ.3,000 அதிகம் ஆகும். இந்தியாவில், அடிப்படையான OnePlus Nord 2 மாடலின் ஆரம்ப விலை ரூ. 27,999 ஆகும்.

ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man பதிப்பு, அதன் பெயருக்கு ஏற்றார் போல Pac-Man டிசைனை அதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. மொபைலின் பின்புறத்தில் Pac-Man லோகோ உள்ளது. இந்த லோகோ, இரவில் ஒளிரும் தன்மை கொண்டுள்ளது, மேலும், இருளில் ஒளிரும் போது, பேக் பேனலில் Pac-Man Maze தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு Pac-Man கதாபாத்திரங்களான இன்க்கி, ப்ளின்கி, பிங்கி ஆகியவை சேர்க்கப்பட்ட வெளிப்படையாகத் தெரியும் தீம் கொண்ட கேஸ் உடன் வருகிறது. மொபைலை ஆன் செய்த உடன், ஒரு டைனமிக் Pac-Man தீம் அடிப்படையிலான வால்பேப்பர் தோன்றும்.

Also read... உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் பொதுவாக செய்யப்படும் தவறுகள்!

சார்ஜ் செய்யும் போது, Pac-Man தீமின் அடிப்படையில் அனிமேஷன் காட்சிகள், ரிங்டோன்கள், ஐகான்ஸ், Pac-Man அடிப்படையில் டிசைன் செய்யப்பட்ட ஃபிங்கர்லாக் பிரின்ட் அனலாக் செய்யும் முறை மற்றும் பல உள்ளன. அது மட்டுமின்றி, இந்த பதிப்பில், 2015 Pac-Man 256 கேமும் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது.

ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man ஸ்பெசிஃபிகேஷன்ஸ் :

இந்த சாதனத்தின் ஹார்ட்வேர் அமைப்புகள், ஒன்ப்ளஸ் நார்ட் மாடலில் இருப்பது போலவே அமைந்துள்ளது. மீடியாடெக் சிப்செட் கொண்ட ஒன்பிளஸ் ஃபோன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் குறைந்தபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இதில் Warp சார்ஜ் 65 சப்போர்ட்டுடன் கூடிய 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸை போலவே, இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் Sony IMX766 முதன்மை சென்சார் இருக்கிறது. மேலும், இதில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: