• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • OnePlus Nord 2: மீண்டும் வெடித்தது ஒன்பிளஸ் நார்டு 2: உரிமையாளர் படுகாயம்!

OnePlus Nord 2: மீண்டும் வெடித்தது ஒன்பிளஸ் நார்டு 2: உரிமையாளர் படுகாயம்!

ஒன்பிளஸ் நார்டு 2

ஒன்பிளஸ் நார்டு 2

ஒன்பிளஸ் நார்டு 2one plus nord 2 மாடல் மொபைல்கள் இந்தியாவில் இதற்கு முன்பு இருமுறை வெடித்துள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் நார்டு மொபைல் வெடித்துள்ளது. இதில் மொபைல் உரிமையாளருக்கு தொடையில் பலக்க காயம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    ஒன்பிளஸ் நோர்ட் 2 மொபைல் போன் மீண்டும் வெடித்த சம்பவம் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

    முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஒன்பிளஸ் (oneplus) நிறுவனம் தனது வெற்றிகரமான மாடலான நார்டை மேலும் மெருகேற்றி நார்டு 2 5ஜி  (Nord 2 5G) என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.  நார்டு மாடல் மொபைல்கள் இந்தியாவில் இதற்கு முன்பு இருமுறை வெடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நார்டு மொபைல் வெடித்துள்ளது. இதில் மொபைல் உரிமையாளருக்கு தொடையில் பலக்க காயம் ஏற்பட்டுள்ளது.

    ட்விட்டர் பயனாளர் சுஹித்சர்மா எனது ட்விட்டர் பக்கத்தில், மொபைல் வெடித்தது தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும், “ ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் மொபைல் என்ன செய்துள்ளது என்பதை பாருங்கள். பின்விளைவுகளுக்கு தயாராக இருங்கள். மக்கள் வாழ்வோடு விளையாடுவதை நிறுத்துங்கள். உங்களால் அந்த பையன் தனக்கு வேண்டப்பட்டவர்களின் எண்களை தொலைத்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மிகவும் கவனத்துடன் அணுகுவதாகவும்  பாதிக்கப்பட்ட நபரை தங்களது குழுவினர் தொடர்புகொண்டதாகவும் செல்போன் வெடித்ததுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - எப்படி தெரியுமா?


    இதற்கு முன்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த  பெண் ஒருவர் அண்மையில் நார்டு 2 மொபைலை வாங்கியுள்ளார்.  இந்நிலையில், தனது பையில் மொபைலை வைத்துக்கொண்டு அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பையிலிருந்த அவரது நார்டு மொபைல் போனின் பேட்டரி வெடித்துள்ளது.

    இதேபோல், டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவரின் ஒன்பிளஸ் நார்டு 2 மொபைலும் வெடித்தது.

    மேலும் படிக்க: ஐபோன் 13 ப்ரோ vs கூகுள் பிக்சல் 6 ப்ரோ... இரண்டில் எது சிறந்த கேமரா ஃபோன்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: