• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • OnePlus Nord 2: வாங்கிய ஐந்தே நாளில் வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்டு பேட்டரி!

OnePlus Nord 2: வாங்கிய ஐந்தே நாளில் வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்டு பேட்டரி!

மொபைல்

மொபைல்

தனது பையில் மொபைலை வைத்துக்கொண்டு அப்பெண் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பையிலிருந்த அவரது நார்டு மொபைல் போனின் பேட்டரி வெடித்துள்ளது.

  • Share this:
    பெங்களூரில் வங்கிய சில நாட்களிலேயே ஒன்பிளஸ் நார்டு 2 மொபைலின் பெட்டரி வெடித்தது தொடர்பான ஒன்பிளஸ் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.

    முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெற்றிகரமான மாடலான நார்டை மேலும் மெருகேற்றி நார்டு 2 5ஜி என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.  பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த மொபைல் போன் வாடிக்கையாளர்களை பெரிதும்  கவர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் ஃப்ரீயா பாக்கணுமா ?


    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த  பெண் ஒருவர் அண்மையில் நார்டு 2 மொபைலை வாங்கியுள்ளார்.  இந்நிலையில், தனது பையில் மொபைலை வைத்துக்கொண்டு அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பையிலிருந்த அவரது நார்டு மொபைல் போனின் பேட்டரி வெடித்துள்ளது.



    இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் அன்குர் சர்மா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  அதில், வாங்கி 5 நாட்களே ஆன நிலையில், மொபைல் போனின் பேட்டரி வெடித்துவிட்டது என்றும், இதனால் தனது மனைவிக்கு விபத்து ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், செல்போனின் பேட்டரி வெடித்தது தொடர்பான விசாரணையையும் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: 14 மாநிலங்களில் வீழ்ச்சியை சந்தித்த ஏர்டெல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: