ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பச்சைக்கோடு போட்ட ஒன் பிளஸ் நிறுவனம்! கடுப்பில் பயனர்கள்.. சரிசெய்ய என்ன செய்யலாம்?

பச்சைக்கோடு போட்ட ஒன் பிளஸ் நிறுவனம்! கடுப்பில் பயனர்கள்.. சரிசெய்ய என்ன செய்யலாம்?

ஒன் ப்ளஸ்

ஒன் ப்ளஸ்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் முழுவதும் ஒன் பிளஸ் (OnePlus) மொபைல் யூசர்களை பற்றிய ட்ரோல்கள் அதிகமாக உலா வருகின்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் முழுவதும் ஒன் பிளஸ் (OnePlus) மொபைல் யூசர்களை பற்றிய ட்ரோல்கள் அதிகமாக உலா வருகின்றன. ஒன் ப்ளஸ் யூசர்களுக்கு தற்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட்டினால்தான் இவ்வளவு அக்கப்போர்! ஒன் ப்ளஸ் நிறுவனம் எப்போது தனது ஆக்ஸிஜன் ஓ எஸ் (Oxygen OS) ஐ கலர் ஓஎஸ்(Colour OS) ஐ அடிப்படையாக வைத்து உருவாக்க துவங்கியதோ, அப்போதே ஒன் பிளஸ் பிராண்டின் மீது இருந்த மவுசு குறைய ஆரம்பித்துவிட்டது. பேருக்கு ஆக்ஸிஜன் ஓஎஸ் என்று இருந்தாலும், கலர் ஓஎஸ்- ன் பல்வேறு அம்சங்கள் தான் ஒன் பிளஸ் மொபைல் முழுவதும் நிறைந்துள்ளன. இதனால் விண்டேஜ் ஆக்சிஜன் ஒஎஸ் யூசர்கள் பலரும் அதிருப்திக்குள்ளாகி, ஒன் பிளஸ் மொபைல் வாங்குவதை தவிர்த்து வந்தனர்.

  இதைப் பற்றி பல்வேறு புகார்கள் இருந்த நிலையில் அடுத்து வரும் புதிய அப்டேட்டில் கலர் ஓஎஸ்-ன் அம்சங்கள் அவ்வளவாக இருக்காது என்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் யூசர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டிலும் பல அம்சங்கள் கலர் ஓஎஸ்-ஐ பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

  இதனால் சமூக வலைத்தளமெங்கும் பல்வேறு யூசர்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் கலர் ஓஎஸ் ஐ சேர்த்துக் கொண்டதால் ஒன் பிளஸ் தன்னுடைய தனித்தன்மையை இழந்து விட்டதாகவும் பல்வேறு கருத்துக்களை பார்க்க முடிகிறது.

  ஏற்கனவே இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் ஒருபுறம் ஓடி கொண்டிருக்க, சமீபத்தில் ஆண்ட்ராய்டு 13 க்கான ஆக்சிஜன் ஓஎஸ் 13 அப்டேட்டை ஒன் பிளஸ் நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் மொபைல்களுக்கு வெளியிட்டிருந்தது. பலவித புதிய வசதிகளும், சில முன்னேற்றங்களையும் செய்து வெளியிடப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியே கூறிக் கொண்டாலும்,உண்மையில் ஒன் பிளஸ் யூசர்கள் பலரும் இந்த அப்டேட்டிற்கு பிறகு மிகப்பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

  கள்ள உறவில் 'பொம்மை புருஷர்'.. பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்.. குழப்பத்தில் இணையவாசிகள்!

  காரணம் என்னவெனில் ஆக்ஸிஜன் 13 அப்டேட்டுடன் சேர்த்து யூசர்களுக்கு மிக பெரும் பச்சை கோட்டை புதிய அப்டேட்டில் சேர்த்து கொடுத்துள்ளது அந்நிறுவனம்! மொபைலின் திரையில் மிக நீண்ட பச்சை நிற கோடு ஒன்று புதிய அப்டேட்டிற்கு பிறகு பலரின் மொபைல்களிலும் தோன்றுகிறது. அதிகமான ஒன் பிளஸ் யூசர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதாக தோன்றினாலும், ஒன் பிளஸ் 8 சீரிஸ் யூசர்களுக்கு தான் மிக அதிக அளவில் இந்த அப்டேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  வாடிக்கையாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் இதனை சரி செய்ய முடியவில்லை. முக்கியமாக புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 13-ன் அப்டேட்டுக்கு பிறகு தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளதால் அப்டேட்டில் ஏதாவது கோளாறு இருக்கலாம் என்று பலர் ஒன் பிளஸ் கம்யூனிட்டியில் தங்கள் புகாரை பதிவு செய்துள்ளனர். அங்கு தான் பலருக்கும் புதிய அப்டேட்டிற்கு பிறகு இந்த பச்சை நிற கோடு பிரச்சனை எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

  மேலும் மிக விரைவிலேயே புதிய அப்டேட்டில் இந்த பிரச்சனையை சரி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் மொபைலில் தோன்றும் இந்த கோடை உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால் மீண்டும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1 வெர்ஷனுக்கு உங்கள் ஓஎஸ்-ஐ ரோல் பேக் செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்யும்போது உங்கள் மொபைலில் ஃபேக்டரி டேட்டா ரீசெட் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

  ஒரு வேளை உணவுக்கு ரூ.1.3 கோடி பில்... அப்படி என்ன சாப்பிட்டு இருக்காங்க பாருங்க

  புதிய அப்டேட்ட்டில் உள்ள பிரச்சினையை இந்த வழிகள் மூலம் சரி செய்ய முயற்சிக்கலாம்:

  • போனை ரீஸ்டார்ட் செய்து பார்க்கலாம்
  • சாதாரண ரீஸ்டார்ட் வேலை செய்யவில்லை எனில் சேஃப் மோடில் ரீஸ்டார்ட் செய்து பார்க்கலாம்.
  • மேலே சொன்ன எந்த வழியும் வேலை செய்யவில்லை எனில் போனை மொத்தமாக ஃபேக்டரி டேட்டா ரீசெட் செய்வதுதான் ஒரே வழி. இதை செய்வதற்கு முன்பு உங்கள் முக்கியமான டேட்டா அனைத்தையும் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

  ஒருவேளை இந்த கோடு இருப்பது உங்களுக்குபெரிய பிரச்சினையாக தோன்றவில்லை என்றால் தாராளமாக அடுத்த அப்டேட் வரை காத்திருக்கலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Mobile phone, Mobile Phone Users, One plus