முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் அறிமுகமாகியுள்ள 11.61 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட OnePlus Pad.! - சிறப்பம்சங்கள் என்ன.?

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள 11.61 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட OnePlus Pad.! - சிறப்பம்சங்கள் என்ன.?

ஒன்பிளஸ் டேப்லட்

ஒன்பிளஸ் டேப்லட்

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவிலும், உலக அளவிலும் அதன் மெகா லாஞ்ச் ஈவன்ட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் நிறுவனம் அதன் முதல் டேப்லெட்டான OnePlus Pad-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. OnePlus Cloud 11 என்ற இந்த ஈவன்ட்டில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் OnePlus TV 65 Q2 Pro-வுடன் OnePlus Keyboard 81 Pro-வையும் வெளியிட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவிலும், உலக அளவிலும் அதன் மெகா லாஞ்ச் ஈவன்ட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் நிறுவனம் அதன் முதல் டேப்லெட்டான OnePlus Pad-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. OnePlus Cloud 11 என்ற இந்த ஈவன்ட்டில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் OnePlus TV 65 Q2 Pro-வுடன் OnePlus Keyboard 81 Pro-வையும் வெளியிட்டது.

தவிர நிறுவனம் OnePlus Bud Pro 2 மற்றும் Buds Pro 2R உள்ளிட்ட இரண்டு புதிய TWS இயர்பட்ஸ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Buds Pro 2 இயர்பட்ஸ்கள் டூயல் ட்ரைவர்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ANC உடன் வருகின்றன. இது ANC ஆஃப் மூலம் 39 மணிநேர பேட்டரி லைஃபிற்கு உறுதியளிக்கிறது. இப்போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் டிவைஸான OnePlus Pad பற்றி பார்க்கலாம்.

OnePlus Pad டேப்லெட்டின் அம்சங்கள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

OnePlus நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டான OnePlus Pad, 144Hz, 2800x2000 ரெசல்யூஷன் (296 ppi) மற்றும் 500nits பிரைட்னஸுடன் 11.61-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 7:5 ஸ்கிரீன் ரேஷியோ மற்றும் 88% ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ மற்றும் 2.5D கர்வ்டு கிளாஸ், 6.54 மிமீ மெல்லிய மற்றும் 552 கிராம் எடையை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13-ல் இயங்கும் OnePlus Pad டேப்லெட்டானது மீடியா டெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் ப்ராசஸர் மற்றும் 12GB வரையிலான LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டில் Dolby Vision மற்றும் Dolby Atmos உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. குவாட் ஸ்பீக்கர்ஸ்களுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ள Dolby Atmos ஆடியோ சிஸ்டம் வருகிறது. இந்த டேப்லெட் பின்புறத்தில் ஒரு ஸ்மூத் மெட்டாலிக் கேஸை கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் பின்புறம் 13MP பிரைமரி கேமரா மற்றும் வீடியோ சாட்டிங் செய்ய ஏதுவாக முன்பக்கம் 8MP கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 9,510mAh பேட்டரியுடன் வரும் இந்த டேப்லெட் மற்றும் 14.5 மணிநேர வீடியோ ப்ளேபேக் மற்றும் ஒரு மாத ஸ்டாண்ட்பை லைஃப் வழங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.

இது 67W SuperVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது பயன்படுத்தி சார்ஜ் செய்தல் 80 நிமிடங்களுக்குள் டிவைஸ் சார்ஜாகி விடும். வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இந்த பேப்லெட் ப்ரீஆர்டர் செய்ய கிடைக்கும் மற்றும் வரும் வாரங்களில் இதன் விலை விவரங்கள் வெளியிடப்படும். இந்த டேப்லெட்டில் நேரோ பெசல்ஸ் மற்றும் விளிம்புகளுக்கு அருகில் சாஃப்ட் கர்வ்ஸ் உள்ளன. இது iPad-கள் மற்றும் Xiaomi Pad 5 டேப்லெட்டுகளை போலல்லாமல், ஒப்பீட்டளவில் ஷார்ப்பர் எட்ஜஸ்களை கொண்டுள்ளது. இதன் கீழே சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இதன் ஹாலோ கிரீன் வேரியன்ட்டை வாங்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த டிவியான OnePlus TV 65 Q2 Pro 4K சீரிஸையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது QLED 4K பேனலுடன் 65 இன்ச் ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ்ரேட்டை சப்போர்ட் செய்கிறது மற்றும் குவாண்டம் டாட் லேயர் டெக்னலாஜியை கொண்டுள்ளது. இந்த டிவி-யின் டிஸ்ப்ளே Gamma Engine அல்ட்ராவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக ஆடியோ அனுபவத்தை வழங்க, OnePlus ஒரு சக்திவாய்ந்த 70-வாட் ஸ்பீக்கரை இந்த டிவி-யின் base-ல் இணைத்துள்ளது. இது ஏழு ஸ்பீக்கர்களுடன் 2.1 சேனலை சப்போர்ட் செய்கிறது. OnePlus-ஆனது MacOS, Windows மற்றும் Linux போன்ற பல்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் வேலை செய்வதை உறுதிசெய்யும் வகையில் கீபோர்டு லேஅவுட் மற்றும் கனெக்ஷனை உருவாக்க புகழ்பெற்ற Keychron-உடன் கூட்டு சேர்ந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் மற்றும் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க விலை தெரியவரும்.

First published:

Tags: One plus, Oneplus, Technology