ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

OnePlus மீண்டும் வந்துவிட்டது! அலர்ட் ஸ்லைடர் & Hasselblad டியூன் செய்யப்பட்ட வண்ணங்கள் போன்ற ரசிகர்களுக்குப் பிடித்த அம்சங்களுடன்.!

OnePlus மீண்டும் வந்துவிட்டது! அலர்ட் ஸ்லைடர் & Hasselblad டியூன் செய்யப்பட்ட வண்ணங்கள் போன்ற ரசிகர்களுக்குப் பிடித்த அம்சங்களுடன்.!

ஒன் பிளஸ்

ஒன் பிளஸ்

OnePlus 11 5G மற்றும் Buds Pro 2 பற்றி நமக்கு அதிகம் தெரியாது. உங்களை "கிளவுட் 9" இலிருந்து "கிளவுட் 11"க்கு நகர்த்துவதற்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்குவதாக OnePlus உறுதியளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

OnePlus மீண்டும் வந்துவிட்டது! OnePlus 11 5G, OnePlus Buds Pro 2 மற்றும் "பல்வேறு OnePlus தயாரிப்புகளுக்கான" உலகளாவிய ஆஃப்லைன் வெளியீட்டு நிகழ்ச்சி பிப்ரவரி 7, 2023 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று தொழில்நுட்ப வணிகம் தெரிவித்துள்ளது. இது சமீபத்தில் தனது 9-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அவை என்னவாக இருக்கும் என்பதில் பலருக்கு ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உண்டாக்கியது. மேலும், இந்த நிறுவனம் 2019க்குப் பிறகு இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை!

இப்போது சில காலமாக OnePlus 11 5Gக்கான டீஸர்களை நாம் சமூக ஊடகங்களில் பார்த்து வருகிறோம். நிச்சயமாக இது ஒரு அழகான ஃபோன் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதன் நேர்த்தியான ஸ்டைலுடன், பின்புறத்தில் ஒரு பெரிய கேமராவை கொண்டிருப்பது மிகவும் சிறப்பானது. இதில் மூன்று கேமரா மாடல்கள் உள்ளன. Hassel பிராண்டிங் அம்சம் திரும்ப வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அற்புதமான வளைந்த அலர்ட் ஸ்லைடரைக் கவனித்தீர்களா? அது இன்னும் சிறப்பு.

தொழில்நுட்ப பிராண்டான OnePlusஐ ஆதரிக்கும் வலுவான சமூகம் அதன் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. புதிய தயாரிப்புகளை வடிவமைக்கும்போது நிறுவனம் பயனரின் கருத்துக்களைக் கேட்டு அதை எந்த அளவிற்கு கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கான சான்றாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட அலர்ட் ஸ்லைடர் விளங்குகிறது. Hasselblad பிராண்டிங் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது, Hasselblad மற்றும் OnePlus மீண்டும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஃபோனின் கேமரா கேப்சர் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் நிறத்தை இது மேம்படுத்துகிறது.

நாம் நினைவுப்படுத்தி பார்த்தோமானால் முந்தைய OnePlus ஃபோன் மாடல்கள் Hasselblad-டியூன் செய்யப்பட்ட வண்ணங்களுடன் புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் யதார்த்தமான, இயற்கையான வண்ணங்களை வழங்கின. மேலும், புகைப்படக் கலைஞர்கள் மிகவும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கண்ணோட்டத்தில் படங்களைப் பிடிக்க பயன்படுத்தக்கூடிய எக்ஸ்-பான் பயன்முறையும் இருந்தது.

OnePlus 11 5G மற்றும் Buds Pro 2 பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

இந்த ஆரம்ப கட்டத்தில் OnePlus 11 5G மற்றும் Buds Pro 2 பற்றி நமக்கு அதிகம் தெரியாது. உங்களை "கிளவுட் 9" இலிருந்து "கிளவுட் 11"க்கு நகர்த்துவதற்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்குவதாக OnePlus உறுதியளிக்கிறது. உண்மையில், "விரைவான மற்றும் மென்மையான" ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவோம் என்று அவர்கள் உறுதியளிக்கிறார்கள். சந்தேகத்திற்கிடமில்லாத இன்னொரு சிறப்பு என்னவென்றால் OnePlus ஃபோன்கள் சமீபத்திய, சிறந்த ஹார்டுவேர்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு முறையும் முதன்மை செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Buds சற்று வித்தியாசமானவை. முந்தைய Bud Proவைப் போலவே, ஃபுல் பாடி, ஸ்டுடியோ-குவாலிட்டி ஆடியோ மற்றும் "கிரிஸ்டல் கிளாரிட்டி" ஆகியவற்றை வழங்கும் ஒரு மேம்பட்ட அனுபவம் இதிலும் கிடைக்குமென நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. செவிவழி அனுபவத்திற்காக புதிய Buds-ல் என்ன உள்ளது என்பதைக் காண நாம் மிகவும் ஆவலாக உள்ளோம்.

வெளியீட்டு நிகழ்ச்சியில் வேறு என்ன நடந்தாலும், OnePlus அதன் நம்பகத்தன்மை வாய்ந்த 'நெவர் செட்டில்' நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் என்றும் பிரீமியம் கட்டமைப்பு மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஹார்டுவேர் உடன் பிரீமியம் தரத்திலான மொபைல் ஃபோன்களின் வழக்கமான கலவையை வழங்கும் என்றும் நாம் எதிர்ப்பார்க்கலாம். அந்த வகையில், OnePlus நம்மை ஒருபோதும் ஈர்க்கத் தவறியதில்லை!

First published:

Tags: One plus, Tamil News