பயனாளர்களின் தகவல்களை ‘லீக்’ செய்யும் குறைபாடு- சரிசெய்த ஒன்ப்ளஸ்!

பயனாளர்களின் புகைப்படங்கள் பொதுவெளியில் லீக் ஆகியுள்ளது. இத்தவறை தற்போது ஒன்ப்ளஸ் முற்றிலுமாக சரிசெய்துள்ளது.

Web Desk | news18
Updated: July 21, 2019, 4:14 PM IST
பயனாளர்களின் தகவல்களை ‘லீக்’ செய்யும் குறைபாடு- சரிசெய்த ஒன்ப்ளஸ்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 21, 2019, 4:14 PM IST
ஒன்ப்ளஸ் நிறுவனம் பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்துவந்த தனது பாதுகாப்புக் குறைபாட்டை தற்போது சரி செய்துள்ளது.

சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஒன்ப்ளஸ் தயாரிப்புகளில் பாதுகாப்புக் குறைபாடு ஒன்று இருந்துள்ளது. கவனிக்கப்படாத இந்தக் குறைபாட்டால் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பயனாளர்களின் சுய தகவல்கள் நீண்ட காலமாக லீக் ஆகி வந்துள்ளன.

கடந்த மாதம் ’9-5 கூகுள்’ என்ற ஆய்வின் அடிப்படையில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து தவறுதலாகப் பயனாளர்களின் தகவல்கள் லீக் ஆவதாகக் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்திய ஒன்ப்ளஸ் தன்னிடம் தவறு இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது. ஆனால், பொதுவெளியில் குறைபாடு குறித்த விவரங்களை ஒன்ப்ளஸ் வெளியிடவில்லை.


‘Shot on OnePlus' என்ற ஒன்ப்ளஸின் ஆப் ஒன்றில்தான் குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்களின் புகைப்படங்கள் பொதுவெளியில் லீக் ஆகியுள்ளது. இந்த தவறை தற்போது ஒன்ப்ளஸ் முற்றிலுமாக சரிசெய்துள்ளது.

மேலும் பார்க்க: சுமார் 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்தது அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...