அமேசான் விற்பனைத் திருவிழா: 2 நாட்களில் ₹500 கோடி வருவாய் ஈட்டிய One Plus!

அதிகம் விற்பனையான டிவி ஆக 69,900 ரூபாய் மதிப்புள்ள ஒன்ப்ளஸ் டிவி 55Q1 உள்ளது.

அமேசான் விற்பனைத் திருவிழா: 2 நாட்களில் ₹500 கோடி வருவாய் ஈட்டிய One Plus!
ஒன்ப்ளஸ்
  • News18
  • Last Updated: October 1, 2019, 8:18 PM IST
  • Share this:
அமேசான் விழாக்கால விற்பனைத் திருவிழா மூலம் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் வெறும் இரண்டு நாட்களில் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

அமேசான் விற்பனைக் காலம் செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 7T போன் உள்ளது. இதனது விலை 37,999 ரூபாய் ஆகும். இதேபோல், அதிகம் விற்பனையான டிவி ஆக 69,900 ரூபாய் மதிப்புள்ள ஒன்ப்ளஸ் டிவி 55Q1 உள்ளது.

சில காலம் இல்லாமல் தற்போது மீண்டும் ஒன்ப்ளஸ் போனின் சிறப்புகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. “வாடிக்கையாளரை மகிழ்விக்க தொடர்ந்து வடிவமைப்பிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் அப்டேட் செய்து வருவதை எங்களது தயாரிப்புகளை முன்னணியில் வைக்கிறது” என்கிறார் ஒன்ப்ளஸ் இந்தியா மேலாளர் விகாஸ் அகர்வால்.


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 100 சதவிகித வளர்ச்சியை எட்டியிருப்பதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. “வட்டியில்லா தவணை முறை, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், உடனடி வங்கிக்கடன், தொடர் அப்க்ரேட் வெளியீடுகள் ஆகியன இந்த விழாக்கால விற்பனையில் எங்களது நிறுவனத்துக்குப் பெரிதும் உதவியது” என்கிறார் அமேசான் துணைத் தலைவர் மனிஷ் திவாரி.

மேலும் பார்க்க: சர்வதேச வரவேற்பைப் பெற்றும் இந்தியாவுக்கு வராத அமேசான் டெக் சாதனங்கள்!

தொடக்கப் பள்ளியின் அவலநிலையை எடுத்துரைத்த சிறுமி!
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்