ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி OnePlus போன்களில் 'Jio True 5G' சேவை : எந்தெந்த மாடல்களில் தெரியுமா?

இனி OnePlus போன்களில் 'Jio True 5G' சேவை : எந்தெந்த மாடல்களில் தெரியுமா?

ஜியோ

ஜியோ

JIO True 5G + OnePlus : அதிவேக இணையச் சேவையை வழங்கும் ஜியோயுடன் ஒன்பிளஸ் இணைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் அதிவேக இணையச் சேவையை வழங்கும் ஜியோ நிறுவனத்துடன் உலகளாவிய பிரீமியம் பிராண்டான ஒன்பிளஸ் இணைந்துள்ளது. ஒன்பிளஸ்-இன் புதிய மாடல் ஒன்பிளஸ் 10 சீரிஸ் உட்படப் பல மாடல்களில் இனி ஜியோவில் ட்ரூ 5ஜி சேவையைப் பெறமுடியும். மேலும் இதனுடன் ஒன்பிளஸ் ஆண்டுவிழா சலுகையில் ஆப்பரும் வெளியாகியுள்ளது.

அதிவேக இணையச் சேவையான ஜியோவில் ட்ரு 5ஜி ஒன்பிளஸ் போன்களில் பல மாடல்களில் இனி கிடைக்கும். டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து ஜியோவில் 5ஜி சேவையை பெரும் ஒன்பிளஸ் போன் மாடல்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாடல்களுக்கு விரைவில் ஜியோ 5ஜி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஜியோ ட்ரு 5ஜி சேவையை பெரும் மாடல்கள்:

உலகளாவிய பிரீமியம் பிராண்டான ஒன்பிளஸ்-இன் புதிய மாடலான OnePlus 10 சீரிஸில் இனி அதிவேக ஜியோ 5ஜி சேவையைப் பெறமுடியும். அதே போல் OnePlus 9R மற்றும் OnePlus 8 சீரிஸ் வாடிக்கையாளர்களும் 5ஜி சேவையைப் பெறலாம்.

மேலும் Nord, Nord 2T, Nord 2, Nord CE, Nord

CE 2 மற்றும் Nord CE 2 Lite மாடல்களின் உரிமையாளர்களும் ஜியோவில் ட்ரு 5ஜி சேவையைத் தடையில்லாமல் பெறமுடியும்.

இவை தவிர OnePlus 9 Pro, OnePlus 9 மற்றும் OnePlus 9RT மாடல்களிலும் விரைவில் ஜியோ ட்ரு 5ஜி சேவை உபயோகப்படுவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சூப்பரா இருக்கே.. பட்ஜெட் விலையில் பக்காவான நோக்கியா ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் ஆண்டுவிழா சலுகை:

ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ட்ரு 5ஜி சேவையை பெரும் சந்தோசமான செய்தியுடன் ஆண்டுவிழாவுக்கான சலுகையும் அறிவித்துள்ளனர்.

ஜியோ ட்ரு 5ஜி சேவையைப் பெறத் தகுந்த ஒன்பிளஸ் மாடல்கள் கொண்டுள்ளவர்கள் மற்றும் ஜியோ 5 ஜி வாடிக்கையாளர்கள் டிசம்பர் 13 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறும் ஒன்பிளஸ் ஆண்டுவிழா விற்பனையில் ரூ.10,800/- வரை கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். மேலும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையாக ரூ.1,499 மதிப்புள்ள Red Cable Care plan மற்றும் ரூ.399 மதிப்புள்ள Jio Saavn Pro plan இலவசமாக வழங்கப்படும்.

ஜியோ 5ஜி மற்றும் ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான சலுகையை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் சுனில் தத் தெரிவிக்கையில், ஒன்பிளஸ்-வுடன் ஜியோ ட்ரு 5ஜி இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்தியாவில் ஜியோவில் அதிவேக இணையச் சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செயல்படுவதே நோக்கமாகக் கொண்டுள்ளதால் அதனின் உண்மையான பலனை ஒன்பிளஸ் மக்களுக்கு அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: 5G technology, Jio, One plus