• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கூலிங்க் வசதியுடன் வரும் ‘ஒன்பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்போன் - அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு!

கூலிங்க் வசதியுடன் வரும் ‘ஒன்பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்போன் - அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு!

ஒன்பிளஸ் 9 ஆர்டி

ஒன்பிளஸ் 9 ஆர்டி

இந்த மொபைல் LPDDR5 RAM மற்றும் UFS 3.1 வசதியை பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான ‘ஒன்பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்ட்போனை வருகின்ற 13ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட்போனுக்கு உலக அளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஹீட் ஆகாமல் கூலிங்காக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதே காரணம். இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கூலிங் சேம்பர் வசதியுடன் வருகிறது.இந்த வசதி ஸ்மார்ட்போனை வெப்பமாகாமல் குளிர்ச்சியாக வைக்கிறது.

சமீப காலங்களில் ஒன்பிளஸ் நிறுவன மொபைல்கள் வெடிக்கின்றன, ஹீட் ஆகின்றன என்ற புகார்கள் வரிசையாக வந்தன. எனவேதான், ஒன்பிளஸ் 9 ஆர்டியில் இந்த கூலிங் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த மொபைலின் மற்றொரு சிறப்பம்சம் 7 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆகும். இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு (Refresh Rate) வசதியை கொண்டுள்ளதால், எவ்வித சிரமும் இன்றி பப்ஜி, பிரீ பயர் போன்ற கேம்களை விளையாடலாம்.

‘குவால்காம் ஸ்னாப்டிராகன்’ 888 SoC என்ற ப்ராசஸர், 4,500 mAh பேட்டரி மற்றும் 65T பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் உள்ளது. 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதிகளை கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போலவே, 6.55-இன்ச் முழு எச்.டி E4 AMOLED டிஸ்ப்ளேவுடன் இது வருகிறது. இதில் ‘இன் டிஸ்பிளே’ கைரேகை சென்சார் வசதியுடன் வருகிறது.

Also read... செல்போன், கணிணிகளில் Hidden Files-ஐ கண்டுபிடிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

இந்த மொபைல் LPDDR5 RAM மற்றும் UFS 3.1 வசதியை பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் நோர்ட் 2 மாடல்களை போல, இதுவும் 50 எம்பி முதன்மை கேமரா, 16 எம்.பி செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோவில் காணப்படும் சோனி ஐஎம்எக்ஸ் 766 50 எம்.பி சென்சார் இந்த போனிலும் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் நீலம், அடர் கருப்பு அல்லது சாம்பல் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி மற்றும் 9 ஆர்டி ப்ரோ மாடல்கள் விலைகள் முறையே, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 23,250 மற்றும் ரூ 34,800 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது வரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: