• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கேம் பிரியர்களுக்கான ஒன் பிளஸ் 9RT ஸ்மார்ட்போனின் விலை - இவ்ளோ சிறப்பம்சங்களா?

கேம் பிரியர்களுக்கான ஒன் பிளஸ் 9RT ஸ்மார்ட்போனின் விலை - இவ்ளோ சிறப்பம்சங்களா?

one plus 9RT

one plus 9RT

ஒன்பிளஸ் 9RT ஆனது 50 MP சோனி IMX766 மெயின் லென்ஸ், OIS ஆதரவுடன் 16MP சோனி IMX481 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP B&W சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

  • Share this:
இந்த மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த 9RTஸ்மார்ட்போனின் அறிமுகம் மொபைல் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இம்மாதம் இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தேதி வெளியிடப்படவில்லை என்றாலும், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்டிராய்டு 11 இயங்குதளத்தில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின், ஜாயிண்ட் எடிசன் பற்றிய தகவல் தெரியவில்லை.

சிறப்பம்சங்கள் :

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா உள்ளிட்ட மற்ற அம்சங்கள், ஒன்பிளஸ் 9RT-ஐ போலவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒன்பிளஸ் 9RT ஆனது SD870 சிப் உடன் வெளியாகலாம் என தகவல் வெளியானாலும், SD888 மூலம் இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புகள் இடம்பெற்றிருக்கும்.

Also Read:  நடுக்காட்டில் 17 வருடங்கள் அம்பாசடர் காரில் தனிமையில் வாழும் மனிதன் – ஒரு நெகிழ்ச்சி வாழ்வியல்!

ஒன்பிளஸ் 9RT ஆனது 50 MP சோனி IMX766 மெயின் லென்ஸ், OIS ஆதரவுடன் 16MP சோனி IMX481 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP B&W சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இது ஒரு 16MP செல்ஃபி கேமரா சென்சாரை கொண்டிருக்கும், இது ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்படும். இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.

பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 mAh பேட்டரி 65W சார்ஜிங் டெக் சப்போர்ட், NFC, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்அப் உடன் வருகிறது.OnePlus 9RT ஜாயிண்ட் எடிஷன் சீனாவிற்கு பிரத்தியேகமாக இருக்கும். இருப்பினும், OnePlus 9RT ஜாயிண்ட் எடிஷன் இருப்பதை இந்த பிராண்ட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தியாவில் மலிவு விலையில் SD888-இயங்கும் ஸ்மார்ட்போனாக இது வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Also Read:    சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – முழு விவரம் உள்ளே

கேம் பிரியர்களுக்கு...

இந்த ஸ்மார்ட்போனானது தீவிர கேம் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்பீடு புரோசஸூக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக, இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மார்க்கெட்டில் ஒன்பிளஸ் 9 ஆர்டி மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கேம் பிரியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: