ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஒன் பிளஸ் 9R vs ஒன் பிளஸ் 8T: வடிவமைப்பு, சிறப்பம்சங்களில் சிறந்தது எது?

ஒன் பிளஸ் 9R vs ஒன் பிளஸ் 8T: வடிவமைப்பு, சிறப்பம்சங்களில் சிறந்தது எது?

ஒன் பிளஸ் 9R vs ஒன் பிளஸ் 8T

ஒன் பிளஸ் 9R vs ஒன் பிளஸ் 8T

ஒன் பிளஸ் 9R மற்றும் ஒன் பிளஸ் 8T மொபைல்களில் வடிவமைப்பு, விலை, சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எது சிறந்தது என ஒரு அலசல்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒன் பிளஸ் நிறுவனத்தின் 9R மற்றும் 8T ஆகிய இரண்டு மொபைல்களுமே கிட்டத்தட்ட ஒரே விலையைக் கொண்டிருக்கின்றன. என்றாலும் இவை இரண்டின் ஹார்டுவேரும் மாறுபட்டது. இப்படியிருக்க இவற்றில் எந்த மொபைல் சிறந்தது என்ற ஒரு ஒப்பீட்டை தற்போது காணலாம்.

விலை:

ஒன் பிளஸ் 9R மொபைலின் 8GB RAM + 128GB வேரியண்ட் இந்தியாவில் ரூ.39,999 என்ற விலையில் கிடைக்கிறது. 12GB + 256GB வேரியண்ட் 43,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. இவை கார்பன் கருப்பு மற்றும் லேக் புளூ என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

ஒன் பிளஸ் 8T மொபைலின் 8GB RAM and 128GB வேரியண்டின் விலை 40,499 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இவை Aquamarine Green, Lunar Silver மற்றும் Aquamarine Green என 3 வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசானிலும் ஆர்டர் செய்ய முடியும்.

வடிவமைப்பு, டிஸ்பிளே:

வடிவமைப்பை பொறுத்தவரையில் இரு மொபைல்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளன. இரண்டிலும் வட்ட வடிவிலான டிஸ்பிளே, ஸ்லிம் பெசல்கள், செவ்வக கேமரா மாட்யூலில் பொருந்தியுள்ள 3 கேமராக்கள் செட் அப் இடம்பெற்றுள்ளது. இரண்டு மொபைல்களிலுமே மேல் இடது புறத்தில் பஞ்ச் ஹோல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஒன் பிளஸ் மாடல்களிலும் 20:9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் கூடிய 6.55-inch full-HD+ (1080 x 2400 pixels) புளூயிட் டிஸ்பிளெ, 402ppi pixel அடர்த்தி, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம் உள்ளன . இரண்டு மொபைல்களுமே HDR10+ சான்று பெற்றவை.

செயலி, மென்பொருள்:

இரண்டு மொபைல்களிலும் முக்கியமான வேறுபாடு மென்பொருளில் தான் உள்ளது. ஒன் பிளஸ் 9R மொபைலில் Qualcomm Snapdragon 870 processor இடம்பெற்றுள்ளது. ஒன் பிளஸ் 8T-யில் Snapdragon 865 SoC பிராசசர் உள்ளது.

கேமரா:

இரண்டு மாடல்களிலுமே ஒரே மாதிரியான கேமரா செட் அப்பே இடம்பெற்றிருக்கிறது. இவற்றில் இருக்கும் ரியர் கேமராவில் 48MP Sony IMX586 primary sensor, 16MP Sony IMX481 sensor, ultra-wide-angle f/2.2 aperture, 5MP macro sensor மற்றும் 2MP monochrome sensor ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இந்த கேமராவை பயன்படுத்தி 1080p மற்றும் 4K வீடியோக்களை 60fps என்ற அளவில் எடுக்க முடியும்.

இரண்டு மாடல்களிலுமே f/2.4 Sony IMX471 sensor உடன் கூடிய 16MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த கேமராக்களை பயன்படுத்தி Super Slow Motion, Time-Lapse, Video Portrait, UltraShot HDR, Nightscape, Macro, Portrait, Pro Mode, Panorama, Smart Pet Capture, AI Scene Detection, RAW Image, Filter, Video Nightscape மற்றும் என்னற்ற வசதிகளை பெற முடியும்.

பேட்டரி, வேகமாக சார்ஜ் செய்தல்:

இரண்டின் பேட்டரியிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டும் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. இந்த ஃபோன் 39 நிமிடங்களில் 100% சார்ஜை எட்டிவிடும் என அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த மொபைல்கள் 5G support, 4G LTE, Wi-Fi 6, Bluetooth, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C port போன்ற வசதிகளையும் பெற்றிருக்கின்றன.

Published by:Arun
First published:

Tags: Mobile phone, Technology