One Plus 7T மற்றும் One Plus புதிய தொலைக்காட்சி அறிமுகம்!

One Plus 7T மற்றும் One Plus புதிய தொலைக்காட்சி அறிமுகம்!
ஒன் பிளஸ் 7 டி
  • News18
  • Last Updated: September 27, 2019, 6:26 PM IST
  • Share this:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus 7T செல்போன் மற்றும் புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை OnePlus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

OnePlus நிறுவனம் தனது புதிய மாடல் செல்போன் மற்றும் புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus 7T செல்போனின் அடிப்படை விலையாக 37 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128GB சேமிப்பு திறன் கொண்ட செல்போன் 37 ஆயிரத்து 999 ரூபாய் என்றும் 256 GB சேமிப்பு திறன் மற்றொரு மாடலின் விலை 39 ஆயிரத்து 999 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 11 மாடலில் உள்ளதை போல, மூன்று கேமராக்களுடன் இந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. OnePlus 7 மற்றும் 7 Pro மாடல்களை விட, இந்த OnePlus 7T மாடல் போனின், 3,800mAh பேட்டரி விரைவாக சார்ஜ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலம் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் இந்த செல்போன் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.


செல்போன் மட்டுமின்றி தனது முதல் தொலைக்காட்சியையும் OnePlus நிறுவனம் வெளியிட்டுள்ளது. OnePlus TV Q1 என்ற மாடல் தொலைக்காட்சியின் விலை 69 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது. OnePlus TV Q1 Pro மாடல் தொலைக்காட்சி 99 ஆயிரத்து 900 ரூபாய்க்கு கிடைக்கும்.

55 இன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சியில் சினிமா பார்ப்பதற்கு ஏற்றாற்போல் அதிநவீன ஸ்பீக்கர்கள் உட்பட பல சிறப்பம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சியும் வரும் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, ஹைதராபாத், உள்ளிட்ட 8 நகரங்களில் உள்ள OnePlus விற்பனையகங்களில் மட்டும், ஒரு நாள் முன்னதாக, இன்றே இந்த செல்போனும், தொலைக்காட்சியும் கிடைக்கும்.

First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்