ஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

OnePlus 7, OnePlus 7 Pro Launch Live: Specs, Price, Features, Availability and More

ஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
ஒன்ப்ளஸ் 7
  • Share this:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களின் விலை, ₹32,999 இருந்து தொடங்குகிறது. இந்த ஒன்ப்ளஸ் போன்களை வாங்குவோருக்கு அட்டகாசமான ஆஃபர்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

ஒன்ப்ளஸ் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ₹299-க்கு ரீசார்ஜ் செய்தால், உடனடியாக ₹5,400 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ₹150 மதிப்பிலான 36 வவுச்சர்கள் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் 299க்கு ரீசார்ஜ் செய்யும்போது ₹149க்கு வவுச்சர்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலம், ஒருநாளைக்கு 3 ஜிபி டேட்டா வீதம் அனுபவிக்க முடியும். அதுவும் 4ஜி வேகத்தில்.


அதேபோல், ₹3900 மதிப்பிலான ஆஃபர்களையும் ஜியோ வழங்குகிறது. அதன்மூலம், ZoomCar-ல் ₹2000க்கு தள்ளுபடி பெறலாம். விமான டிக்கெட், ஓட்டல் புக்கிங்கில் ₹1550 வரை தள்ளுபடி கிடைக்கும். Chumbak-ல் வாங்கும் பொருட்களுக்கு 350 வரை தள்ளுபடி பெறலாம்

புதிய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை பின்வருமாறு.

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, 6 ஜிபி+128ஜிபி: ₹48999ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, 8 ஜிபி + 256ஜிபி: ₹52999
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, 12 ஜிபி + 256ஜிபி: ₹57999

ஒன்ப்ளஸ் 7, 6 ஜிபி+128ஜிபி: ₹32999
ஒன்ப்ளஸ் 7 , 8 ஜிபி+256ஜிபி: ₹39999

இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான், ஒன்ப்ளஸ் இணையதளங்களில் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்