Home /News /technology /

அமேசானில் விற்பனையைத் தொடங்கிய ஒன்ப்ளஸ் 6T மெக்லாரன்!

அமேசானில் விற்பனையைத் தொடங்கிய ஒன்ப்ளஸ் 6T மெக்லாரன்!

Oneplus-6T-McLaren-Edition Image: OnePlus UK

Oneplus-6T-McLaren-Edition Image: OnePlus UK

இந்த ஸ்மார்ட்போனின் பெரிய சிறப்பே இதனின் ரேம் மற்றும் பேட்டரி டெக்னாலஜி தான் என்று கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்தியாவில் ONEPLUS 6T MCLAREN EDITION விரைவில் வெளிவரும் என கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஒன்ப்ளஸ் நிறுவனம் அறிவித்தது. அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது அமேசானில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது ஒன்ப்ளஸ் 6T.

ONEPLUS 6T MCLAREN EDITION ஸ்மார்ட்போன் 10 ஜிபி ராம் உடன் 50,990 ரூபாய்க்கு அமேசானில் விற்பனை ஆகிறது. நேற்று தொடங்கிய இப்புதிய ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு இதுவரையில் எந்த ஆஃபரும் அறிவிக்கப்படவில்லை.

ONEPLUS 6T போலவே வெளிவந்துள்ள ONEPLUS 6T MCLAREN EDITION, கூடுதலாக மிகச்சிறந்த பேட்டரி டெக்னாலஜி கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெரிய சிறப்பே இதனின் ரேம் மற்றும் பேட்டரி டெக்னாலஜி தான் என்று கூறப்படுகிறது.

6.4” டிஸ்ப்ளே கொண்ட இப்புதிய ஒன்ப்ளஸ் 6T MCLAREN EDITION 2,340x 1,080 பிக்ஸல்ஸ் ரெசொலியூஷன் கொண்டதாக உள்ளது. பேட்டரியின் அளவு 3,700 mAh. முன், பின் என இரண்டு கேமிராக்களும் 20 MP, 16 MP பிக்ஸல் உள்ளது.

மேலும் பார்க்க: ஸ்டெர்லைட் ஆலையை ஏன் திறக்கலாம்? பசுமை தீர்ப்பாயத்தின் விளக்கம்
Published by:Rahini M
First published:

Tags: One plus

அடுத்த செய்தி