இந்தியாவுக்கு மட்டும் சிறப்புத் தள்ளுபடி அறிவித்த OnePlus 6T!

OnePlus ஸ்டொர்களில் மட்டும் 2,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் உள்ளன.

இந்தியாவுக்கு மட்டும் சிறப்புத் தள்ளுபடி அறிவித்த OnePlus 6T!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 30, 2018, 2:52 PM IST
  • Share this:
புத்தாண்டு தள்ளுபடிகள் களைகட்டி வரும் வேளையில் இந்தியாவில் தனது முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாட சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது ஒன்ப்ளஸ் 6டி (OnePlus 6T).

டிசம்பர் 29, 2018 முதல் ஜனவரி 6, 2019 வரையில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை OnePlus 6T அறிவித்துள்ளது. அமேசான் மூலமாக OnePlus 6T ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்தக் குறுகிய கால தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர்கள் அமேசானை தளத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும், HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் OnePlus 6T ஸ்மார்ட்ஃபோன் வாங்கினாலும் 1,500 ரூபாய் தள்ளுபடி உள்ளது. இதுபோக பல சலுகைகளும் OnePlus 6T விற்பனையில் உள்ளது. ஆனால், 1,500 ரூபாய் தள்ளுபடியே உச்சபட்சமாகும். OnePlus 6T ஸ்மார்ட்ஃபோனை oneplus.in தளத்தில், க்ரோமா ஷோரூம்களில், OnePlus ஸ்டோர்களில் வாங்குவோருக்கு இ.எம்.ஐ. கட்டணத்தில் ஆறு மாத காலத்துக்கு No-cost EMI கொடுக்கப்படுகிறது.


கூடுதலாக OnePlus ஸ்டோர்களில் மட்டும் OnePlus ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 2,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய OnePlus ஃபோன்களுக்கு 2,000 ரூபாயும் இதர பழைய மொபைல்களுக்கு 1,500 ரூபாய்க்கான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

மேலும் பார்க்க: பெற்றோர் வீம்பு... திருமணமான ஒரு வாரத்தில் காதல் ஜோடி தற்கொலை
First published: December 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading