முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன Oneplus..!

வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன Oneplus..!

OnePlus 11 launching in India

OnePlus 11 launching in India

Oneplus : ஒன்பிளஸ் தனது 11 5G போனை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

பிப்ரவரி 7-ஆம் தேதி OnePlus 11 5G மொபைல் இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே தேதியில் மற்றொரு மொபைலையும் அறிமுகப்படுத்த OnePlus திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7 அன்று OnePlus 11R என்ற புதிய மொபைலும் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. OnePlus 11 5G மொபைலின் சில விவரங்கள் ஏற்கனவே கசிந்துள்ள நிலையில், OnePlus 11R-ன் விவரக்குறிப்புகள் பற்றிய உறுதியான தகவல் எதுவும் இதுவரை இல்லை. எனினும் இதற்கு முன்னதாக இந்த மொபைலில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மில்லியன் கணக்கான யூஸர்கள் ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட் அல்லது வேறு பல கேஜெட்களை பற்றி ஆய்வு செய்ய உதவும் MySmartPrice வெப்சைட்டின் கூற்றுப்படி, பிப்ரவரி 7-ல் OnePlus 11 மொபைலுடன் சேர்ந்து அறிமுகமாக உள்ள OnePlus 11R மொபைலானது Qualcomm-ன் Snapdragon 8 Gen 1+ ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இந்த ப்ராசஸர் கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல ஃபிளாக்ஷிப் மொபைல்களில் இடம்பெற்றுளது.

இந்த மொபைலின் பேஸ் வேரியன்ட் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டாரேஜுடன் வரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் கலர் ஆப்ஷன்களில் galactic silver கலரும் ஒன்றாகும். இந்த டாப் வேரியன்ட் 16GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம் என்று ஒரு பிரபல டிப்ஸ்டர் கூறி இருப்பதை MySmartPrice சுட்டிக்காட்டி இருக்கிறது. OnePlus 11R மொபைல் கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் அதன் முன்பக்கத்தில் செல்ஃபி கேமராவிற்காக சென்ட்ரலி அலைன்ட் ஹோல் பஞ்ச் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், OnePlus 11R மொபைலானது கூடவே அறிமுகமாகும் OnePlus 11 5G போலவே பின்பக்கத்தில் மூன்று கேமராக்களை உள்ளடக்கியிருக்கும் எனவும் வெளியாகி இருக்கும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. OnePlus 11R பற்றிய மற்ற விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.35,000-ல் துவங்கும் என்றும் டாப் வேரியன்டின் விலை ரூ.40,000க்கு மேல் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் OnePlus நிறுவனம் முதலில் OnePlus 9R உடன் தனது R-சீரிஸ் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 10R ஆனது OnePlus 10 Pro-ன் toned-down வெர்ஷன் என்றாலும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கியது. ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி பிப்ரவரி 7 அன்று OnePlus 11R-ஐ தவிர OnePlus 11 மொபைலையும் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

OnePlus 11-ஆனது 5G மொபைலாகும். மேலும் இது ஏற்கனவே விற்பனையாகும் ஒன்பிளஸ் 11 சீனா எடிஷன் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் சில சிறிய மார்ட்டன்களும் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றங்கள் எதுவும் இன்றி அப்படியே அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த OnePlus 11 ஃபோன் Hasslebald-tuned கேமராக்கள், ஒரு அலர்ட்-ஸ்லைடர், Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் மற்றும் 100W சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும். OnePlus 11 5G மொபைலில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இல்லாமல் இருக்கலாம்.

இந்த 2 மொபைல்களை தவிர ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7 நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் Q2 Pro 65 டிவி மற்றும் பட்ஸ் ப்ரோ 2 என்ற இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. நிறுவனம் தனது முதல் கீபோர்டை பிப்ரவரி 7-ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. Q2 Pro 65 டிவியின் விலை ரூ.70,000 ஆக இருக்கலாம்.

இந்த டிவி 4K QLED பேனல், டால்பி அட்மோஸ் மற்றும் விஷன் சப்போர்ட் மற்றும் 70W ஸ்பீக்கர்களுடன் வரலாம். OnePlus-ன் Buds Pro 2 அடாப்டிவ் ANC மற்றும் Google ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட்டை கொண்டிருக்கும். இதன் விலை ரூ.10,000-ஆக இருக்கலாம்.

First published:

Tags: Technology