Home /News /technology /

புதிய OnePlus 10T ஸ்மார்ட்போன்.. கேமரா அம்சங்களை வெளிப்படுத்திய நிறுவனம்.!

புதிய OnePlus 10T ஸ்மார்ட்போன்.. கேமரா அம்சங்களை வெளிப்படுத்திய நிறுவனம்.!

OnePlus 10T

OnePlus 10T

OnePlus 10T Smartphone | தனது புதிய பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போனான OnePlus 10T மொபைலை வரும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இந்தியாவிலும் மற்றும் உலகளவிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

OnePlus 10T 5G ஸ்மார்ட் போனின் அறிமுக நிகழ்வு நியூயார்க் நகரில் நடத்தப்பட உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஆகஸ்ட் 3 அன்று நடக்கும் இந்த நிகழ்வை மாலை 7.30 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியாவின் யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு T சீரிஸ் போனை அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் தயாராகி வருகிறது. கடைசியாக OnePlus 8T அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, தற்போது நேரடியாக OnePlus 10T-ஐ பெறுகிறோம். OnePlus 10T மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது. OnePlus-ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Pete Lau, புதிய OnePlus 10T 5G மொபைலானது Qualcomm-ன் லேட்டஸ்ட் பிரீமியம் சிப்செட்டுடன் வரும் என கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிறுவனம் OnePlus 10T 5G-ன் கேமரா உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் community forum-ல் ஷேர் செய்துள்ள ஒரு போஸ்ட்டில், புதிய OnePlus 10T 5G டிரிப்பிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரும் என்று கூறி இருக்கிறது. இதில் 50-மெகாபிக்சல் Sony IMX766 சென்சார் இடம்பெற்றிருக்கும். முக்கிய செயல்திறனில் கவனம் செலுத்துவதால், Hasselblad-பிராண்டட் கேமராவுடன் இந்த மொபைல் வராது என்றும் OnePlus அறிவித்துள்ளது. வரவிருக்கும் OnePlus 10T மொபைலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

OnePlus 10T-ன் எதிர்பார்க்கப்படும் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

* OnePlus 10 Pro-வில் இடம்பெற்றுள்ள Qualcomm Snapdragon 8 Gen 1 ப்ராசஸர் தான், புதிய OnePlus 10T மொபைலிலும் இடம்பெறுவதாக தெரிகிறது.



* சில தகவல்கள் OnePlus 10T மொபைல் 16GB ரேம் மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜூடன் வரும் என்று கூறுகின்றன. இந்த தகவல் உண்மை என்றால் 16GB ரேம் கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போனாக இது இருக்கும்.

* OnePlus 10T மொபைல் 6.7 இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளேவுடன் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ஹை ரெஃப்ரஷ் ரேட்டுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : LockDown Mode : ஹேக்கர்களிடம் எஸ்கேப்பாக ஆப்பிள் ஐபோனின் சூப்பர் ஐடியா.! 

* இந்த புதிய மொபைல் இமேஜ் கிளாரிட்டி என்ஜின் 2.0 எனப்படும் அடுத்த தலைமுறை இமேஜ் ப்ராசஸிங் என்ஜினை பயன்படுத்தும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அல்காரிதம் புகைப்படங்களை விரைவாகவும் அதிக அளவிலான விவரங்களுடன் கிளிக் செய்யவும் உதவும் என நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய போன் HDR 5.0 மற்றும் TurboRAW-ஐ சப்போர்ட் செய்யும்.

* OnePlus 10T போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கும்.



* தவிர இந்த மொபைல் 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4800mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : ரூ.30,000 க்குள் பெஸ்ட் ஸ்மார்ட் டிவி வேணுமா! உங்களுக்கான சாய்ஸ் இதோ..

OnePlus 10T எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விற்பனை விவரங்கள்...

OnePlus 10T 5G மொபைலானது இந்தியாவில் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை மாடல் ரூ.49,999 விலையில் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். மற்ற 2 மாடல்களும் 12GB ரேம் + 256GB மற்றும் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.55,999 என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய கலர்களில் வரும் எனத்தெரிகிறது. புதிய OnePlus 10T வரும் ஆகஸ்ட் 6 முதல் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்ஸ் மற்றும் Exclusive Experience Stores-களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுன்ட் வழங்க போவதாகவும் கூறப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Oneplus, Smartphone, Technology

அடுத்த செய்தி