Home /News /technology /

16GB RAM கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போனாக வெளிவர உள்ள OnePlus 10T.!

16GB RAM கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போனாக வெளிவர உள்ள OnePlus 10T.!

OnePlus 10T

OnePlus 10T

OnePlus 10T | இந்த மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் தொடக்கத்திலோ இந்தியாவில் OnePlus 10T அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் புதிய ஒன்பிளஸ் 10 சீரிஸை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே 10 சீரிஸின் கீழ் OnePlus 10 Pro மற்றும் OnePlus 10R ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், வரவிருக்கும் சில வாரங்களில் OnePlus 10T என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 chipset) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர 16 GB RAM உடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக OnePlus 10T இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் தொடக்கத்திலோ இந்தியாவில் OnePlus 10T அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, 16GB LPDDR5 ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட்டுடன் இணைக்கப்பட்ட 512GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் OnePlus 10T டிவைஸ் அறிமுகமாகலாம். இந்த அறிமுகம் 16GB RAM ஆப்ஷனுடன் வரும் முதல் OnePlus போனாக OnePlus 10T-ஐ மாற்றும். தவிர இந்த புதிய டிவைஸ் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,800mAh பேட்டரி மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டை கொண்டிருக்கும். இது சியான் ஃபாக் மற்றும் ஹெஸியன் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது.



மேலும் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை OnePlus 10T கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. OnePlus 10T மொபைலானது OnePlus 10 Pro போன்ற டிசைனை கொண்டிருக்கும் மற்றும் ஹாசல்பிளாட் கேமராவுடன் (Hasselblad camera) வரும் என்றும் கூறப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி OnePlus 10T இந்தியாவில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் வெளியிடப்படலாம். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குள் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!

மற்ற OnePlus ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும் Amazon India மற்றும் OnePlus வெப்சைட் மூலம் ஆன்லைனில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய Amazon UK லிஸ்ட் வரவிருக்கும் OnePlus 10T ஸ்மார்ட் போனின் சாத்தியமான விலையை வெளிப்படுத்தியது. OnePlus 10T GBP 799 (ரூ. 76,300) என்ற தொடக்க விலையில் வெளியிடப்படும் என்பதை அந்த லிஸ்ட் வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியாவில் அறிமுக விலை என்னவென்பது இன்னும் தெரியவில்லை. எனினும் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து இதுவரை OnePlus 10T பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வராததால், சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட மேற்காணும் தகவல்கள் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.
Published by:Selvi M
First published:

Tags: Oneplus, Technology

அடுத்த செய்தி