Home /News /technology /

ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வரும் OnePlus 10T மாடல்.. தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவது எப்படி.?

ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வரும் OnePlus 10T மாடல்.. தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவது எப்படி.?

Oneplus 10T

Oneplus 10T

OnePlus 10T | 16GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட OnePlus 10T வரும் ஆகஸ்ட் 16 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று OnePlus நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான OnePlus, கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி OnePlus 10T ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. இந்த டிவைஸ் 16GB ரேம் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாக வெளி வந்திருக்கிறது.

ஏற்கனவே OnePlus 10T மொபைலின் 8GB/128GB மற்றும் 12GB/256GB வேரியன்ட்கள் விற்பனையில் உள்ள நிலையில், 16GB ரேம் கொண்ட வேரியன்ட்டின் விற்பனை எப்போது என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 16GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட OnePlus 10T வரும் ஆகஸ்ட் 16 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று OnePlus நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் OnePlus 10T மொபைலின் விலை..

இந்த மொபைலின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கோடன் வேரியன்ட் விலை ரூ.49,999-ல் தொடங்கும் நிலையில், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜுடன் கூடிய வேரியன்ட் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 16-ல் அறிமுகமாக உள்ள OnePlus 10T-ன் 16GB + + 256GB வேரியன்ட்டின் விலை ரூ. 55,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 16 முதல் மதியம் 12 மணி முதல் கிடைக்கும். எனினும் இந்த மொபைலை வாங்க விரும்பும் யூஸர்கள் சில விலை குறைப்பு சலுகைகளைப் பெறலாம். நீங்கள் சிறந்த தள்ளுபடியில் இந்த மொபைலை பெற விரும்புகிறீர்களா.?



பேங்க் ஆஃபர்ஸ்..

OnePlus.in, OnePlus Store, Amazon மற்றும் பார்ட்னர் ஸ்டோர்களில் SBI வங்கியின் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தினால் யூஸர்கள் ரூ.5,000 இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுன்ட்டை பெறலாம். வாடிக்கையாளர்கள் ரூ. 2000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸின் பலனையும் பெறலாம். தவிர ஒன்பிளஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனையும் வழங்குகிறது.

Also Read : எச்சரிக்கை! ஐஃபோன், ஐபேட், மேக்புக் பயனாளர்ககள் இந்த வெர்சன் சாப்ட்வேரை தவிர்க்கவும்

16GB ரேம் வேரியன்ட் வாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் கேஷ்பேக் நன்மைகள் ரூ. 150 உட்பட ரூ.1,199 மதிப்புள்ள சில பலன்களையும் பெறலாம். இருப்பினும், இந்த விற்பனை சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று OnePlus கூறுகிறது.



OnePlus 10T மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

OnePlus 10T மொபைலானது 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12-ல் ஆக்சிஜன்ஓஎஸ் 12.1 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் octa-core Snapdragon 8+ Gen 1 SoC ப்ராசஸர் கொண்டுள்ளது. 4800 mAh பேட்டரி மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் ஹோல் பஞ்ச் கட்-அவுட் ஹவுசிங் 16MP செல்ஃபி கேமரா, மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. OnePlus 10T 5G மொபைலானது டூயல் LED ஃபிளாஷ் கொண்ட ட்ரிப்பிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 50MP, 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை அடக்கம். இந்த மொபைலில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மூலம் பயோமெட்ரிக்ஸ் கையாளப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Oneplus, Technology

அடுத்த செய்தி