முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / OnePlus 10R 5G: இந்தியாவில் அறிமுகமானது! என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

OnePlus 10R 5G: இந்தியாவில் அறிமுகமானது! என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

ஒன்பிளஸ் 10ஆர்

ஒன்பிளஸ் 10ஆர்

ஒன்பிளஸ்10 ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.38,999 ஆகும் .

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி அறிமுகமானது. இது அடிப்படையில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" வெர்ஷன் ஆகும்.

இது 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய எண்டூரன்ஸ் எடிஷன் மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங்குடன் கூடிய மலிவு விலை விருப்பத்தை உள்ளடக்கிய இரண்டு மாடல்களில் வருகிறது. பிரதான அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் கஸ்டம்-டிசைன்டு மீடியாடெக் டைமன்சிட்டி 8100-மேக்ஸ் எஸ்ஓசி உடன் கூலிங் சிஸ்டமையும் பேக் செய்கிறது. மேலும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மாடலில் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் உள்ளது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:

இது 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1,080x2,412 பிக்சல்கள் உடனான 6.7-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 720ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட் வரையிலான ஆதரவுடன் வருகிறது, மேலும் 2.5டி கர்வ்டு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

டூயல்-சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 12.1 உடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது மீடியாடெக் டைமன்சிட்டி 8100-மேக்ஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 12ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான ஆதரவுடன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 மெயின் சென்சார் + 8எம்பி சோனி ஐஎஎக்ஸ்355 சென்சார் + 2எம்பி ஜிசி02எம்1 மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மேலும் ஒன்பிளஸ்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 256ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடன் அனுப்பப்படுகிறது. இரண்டு விருப்பங்களுமே 4,500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

இந்தியாவில் ஒன்பிளஸ்10 ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ்10 ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.38,999 ஆகும் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி விருப்பத்தின் விலை ரூ. 42,999 ஆகும். இந்த இரண்டு வகைகளும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகின்றன. மேலும் 80W சார்ஜிங் கொண்ட ஒன்பிளஸ்10 ஆர் 5ஜி மாடல்கள் ஆனது ஃபாரஸ்ட் க்ரீன் மற்றும் சியரா பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

Also read... விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் ஒன்பிளஸ்10 ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் எண்டூரன்ஸ் எடிஷனின் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மாடல் சியரா பிளாக் நிறத்தில் வாங்க கிடைக்கும்.

இந்திய விற்பனையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி எண்டூரன்ஸ் எடிஷன் ஆகிய இரண்டுமே வருகிற மே 4 முதல் மதியம் 12 மணிக்கு அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் ஆப் வழியாக விற்பனைக்கு வரும்.

First published:

Tags: Oneplus