ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் அதன் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. அதில் ஒன்பிளஸ் 10ஆர் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி எனப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.
இக்கட்டுரையில் நாம் ஒன்பிளஸ் 10ஆர் மீதே அதிக கவனம் செலுத்த உள்ளோம். ஏனெனில் இது சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் (OnePlus Ace) ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஆகும்.
ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மாடல் ஆக இருக்கும். மேலும் 10ஆர் ஆனது - குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்ட - மீடியா டெக் டைமென்சிட்டி சிப்செட்டையும் பேக் செய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை எந்த பிரிவின் கீழ் விலை நிர்ணயம் செய்ய போகிறது? இதில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன் பற்றி உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் இதோ.
ஒன்பிளஸ் 10ஆர் - எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயம்?
வெளியான லீக்ஸ் தகவலின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி+ 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.38,999 இலிருந்து தொடங்கலாம். மேலும் இதில் உள்ள 12ஜிபி ரேம் மாறுபாடு ரூ.44,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். மேலும் 10ஆர் மாடல் ஆனது 80W மற்றும் 150W ஆகிய இரண்டு வெவ்வேறு சார்ஜிங் ஸ்பீட்களை வழங்கக்கூடும் என்றும் வெளியான விவரங்கள் குறிப்பிடுகின்றன. இது தவிர ஒன்பிளஸ் 10ஆர், பிளாக் மற்றும் க்ரீன் நிறங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் - இந்திய பிராண்ட் கிஸ்மோரின் அறிமுகம்!
ஒன்பிளஸ் 10ஆர் - என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கலாம்?
முன்னரே குறிப்பிட்டது போல, ஒன்பிளஸ் 10ஆர் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடாக இருக்கலாம். அது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
Also Read : இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..
மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் மூலம் இயக்கப்படும் உடன் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யும். கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுருக்கும். முன்பக்கத்தில், இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கும். மேலும் 10ஆர் மாடலில் 80W மற்றும் 150W சார்ஜிங் ஸ்பீட்டை ஆதரிக்கும் 4500எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oneplus, Technology